லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருட்டு பட்டம்.. ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.. இங்கிலாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

லண்டன்: தடுப்பூசி ஆராய்ச்சியை திருட முயன்றதாக இங்கிலாந்து குற்றம்சாட்டியதற்கு ரஷ்யா கடும் பதிலடி கொடுத்துள்ளது. நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறன்றன. இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்டுகிறது.

Russia warn UK: “any unfriendly actions” will “not be left without a proper and adequate response”

இந்நிலையில் இந்த தடுப்பூசி ஆராய்ச்சியை திருட ரஷ்யாவின் கிரம்ளின் நகரில் இருந்து ஹேக்கர்கள் முயற்சி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய இந்த குழு, ஏபிடி 29 மற்றும் கோஸி பியர் என அழைக்கப்படும் ஹேக்கர்கள் குழு திருட முயன்றதாக புகார் எழுந்துள்ளது. ரஷ்யா மீது இங்கிலாந்து தடுப்பூசி ஆராய்ச்சியை திருட முயன்றதாக நேரடியாகவே குற்றம் சாட்டி உள்ளது. அத்துடன் இங்கிலாந்து தேர்தலில் தலையிட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.

கொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக்கொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக்

தடுப்பூசி ஆராய்ச்சியை திருட முயன்றதாக அமெரிக்கா, கனடா நாடுகளும் ரஷ்யா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. இதற்கு பதிலடி கொடுத்துள்ள இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரகம் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்றும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் தகுந்த பதிலடி தருவதே வழக்கம் என்றும் எச்சரித்துள்ளது.

English summary
The Russian Embassy in London warned that “any unfriendly actions” will “not be left without a proper and adequate response”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X