லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி.. அடிமடியிலேயே கைவைக்க பார்த்த ரஷ்யா.. அதிர்ந்த இங்கிலாந்து.. மேலை நாடுகள் ஷாக்

Google Oneindia Tamil News

லண்டன்: ரஷ்யாவின் ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. ரஷ்யாவின் கிரம்ளின் நகரில் இருந்து ஹேக்கர்கள் முயற்சி செய்ததாக புகார்கள் எழுந்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கிங் குழு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற சுகாதார அமைப்புகளின் தடுப்பூசிகள் குறித்த உளவுத்தகவல்களை திருட முயற்சிப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வாக்சின்.. மனிதர்களிடம் சோதனையை முடிச்சுட்டோம்.. சொல்கிறது ரஷ்யா! கொரோனா வாக்சின்.. மனிதர்களிடம் சோதனையை முடிச்சுட்டோம்.. சொல்கிறது ரஷ்யா!

ரஷ்ய உளவுத்துறை

ரஷ்ய உளவுத்துறை

ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய இந்த குழு, ஏபிடி 29 மற்றும் கோஸி பியர் என அழைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட குழப்பத்தை சுரண்ட இந்த ஹேக்கர்கள் குழு முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இது பற்றி கூறுகையில், ரஷ்யர்கள் தங்கள் சொந்த தடுப்பூசியை விரைவாக உருவாக்குவதற்காக, மற்ற நாடுகளின் அந்த ஆராய்ச்சியைத் திருடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றனர்.

அஸ்ட்ராஜெனெகா

அஸ்ட்ராஜெனெகா

இனிடையே இங்கிலாந்து கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளதாக அறிவித்து இருந்தது. பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டிஷ்-ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறன்றன. இந்த தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்டுகிறது.

பிரிட்டன் புகார்

பிரிட்டன் புகார்

இந்நிலையில் இந்த அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை திருடுவதுதான் ரஷ்ய ஹேக்கர்களின் முக்கிய இலக்காக இருப்பதாக பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பின் G.C.H.Q. இன் முன்னாள் தலைவர் ராபர்ட் ஹன்னிகன் தெரிவித்தார்.

தேர்தலில் தலையீடு

தேர்தலில் தலையீடு

இதற்கிடையில், கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் கூறியுள்ளார். இங்கிலாந்து - அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷ்யா செய்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.ரஷ்யா மட்டுமல்ல கனடாவும் ரஷ்யா மீது புகார் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தகுற்றச்சாட்டுகளை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.

English summary
Russian hackers are attempting to steal coronavirus vaccine research, the American, British and Canadian governments said Thursday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X