லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசி கொடுமை.. ஓடோடி சென்ற சீக்கியர்கள்.. இங்கிலாந்து எல்லையில் டிரைவர்களுக்கு உணவு வழங்கி.. சபாஷ்

இங்கிலாந்து எல்லையில் உணவு வழங்கினார்கள் சீக்கியர்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: புது வைரஸ் அதாவது கொரோனாவின் 2-ம் அலை பரவுவதாலும், இங்கிலாந்தில் இருந்து செல்வோருக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்திருப்பதாலும், இரு நாட்டு எல்லையில் சிக்கித் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு அங்குள்ள சீக்கியர்கள் சாப்பாடு தந்து உதவி வருகின்றனர்... இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

புது கொரோனா வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது.. இது பழைய கொரோனா வைரஸை விடவும் வேகமாக பரவக்கூடியதாம்.

அதனால், அந்தந்த நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு வருகிறது.. இது பண்டிகை காலம் என்பதால், அனைத்து பண்டிகை, விழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்

பாதிப்பு

பாதிப்பு

அந்த வகையில், இங்கிலாந்துடனான எல்லை மூடப்பட்டுள்ளது.. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தன்னுடைய எல்லையை மூடிவிட்டதால், இங்கிலாந்தில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இருநாட்டு எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

டெஸ்ட்

டெஸ்ட்

கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு லாரிகள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கிறது.. கென்ட் எல்லைப் பகுதியில் மட்டும் 2,850 லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.. இதனால், எல்லையில் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அந்த லாரி டிரைவர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.. அதில் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டும்தான் பிரான்சுக்குள் நுழைய விடுகிறார்கள்.. ஆனால், இந்த டெஸ்ட் செய்து முடிப்பதற்கே பல மணி நேரம் ஆகிவிடுகிறதாம்.

 வசதிகள்

வசதிகள்

எனவே, டிரைவர்களுக்கு உரிய சாப்பாடு, தண்ணீர் எதுவும் கிடைப்பதில்லை.. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் எல்லையில் தவித்து வருகின்றனர்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள், தங்களின் தொண்டு அமைப்புகள் மூலம் பசியால் தவித்து வரும் லாரி டிரைவர்களுக்கு சாப்பாடு தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

சாப்பாடு

சாப்பாடு

பெரும்பாலும் தாங்களாகவே சமைத்து கொண்டு போய் தந்துவிட்டு வருகிறார்கள்.. சமைக்க முடியாதவர்கள், சில ஹோட்டல்களின் மூலம், சாப்பாடு வாங்கி அதனை டிரைவர்களுக்கு தருகிறார்கள்.. இதுதொடர்பான போட்டோக்களையும் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எல்லா சோஷியல் மீடியாவிலும் அவர்கள் ஷேர் செய்துள்ளனர்.. சாப்பாடு, பிஸ்கட்ஸ், தண்ணி என தங்களால் இயன்ற பொருட்களை கொடுத்து டிரைவர்களுக்கு உதவுமாறு பொதுமக்களுக்கும் சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

English summary
Sikh volunteers deliver hot meals to stranded truck drivers in UK Borders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X