உதம்சிங் ரிட்டர்ன்?ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ராணி எலிசபெத்தை கொல்வேன்- சீக்கியர் இளைஞர் வீடியோ
லண்டன்: 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை அன்றைய பிரிட்டிஷ் அரசு சுட்டுப் படுகொலை செய்ததற்கு பழியாக தற்போதைய பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத்தை கொல்ல முயற்சித்ததாக லண்டனில் கைதான சீக்கிய இளைஞர் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இங்கிலாந்தில் பேரெழுச்சியாகப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். பொதுமக்களின் இந்த ஒன்றுகூடல் நிகழ்வுகளால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் விண்ட்சர் கோட்டையில் மகன் இளவரசர் சார்லஸ், மருமகள் கமீலா ஆகியோருடன் ராணி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். இந்த கொண்டாட்டங்களின் போது மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் விண்ட்சர் கோட்டைக்குள் நுழைய முயன்றதால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சீக்கியர் என தெரியவந்தது.
கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு

டார்கெட் எலிசபெத் ராணி
இதனையடுத்து அந்த சீக்கிய இளைஞரிடம் இங்கிலாந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 19 வயது சீக்கிய இளைஞர் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோவில், 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக ராணி இரண்டாம் எலிசபெத்தை தாம் படுகொலை செய்ய போவதாக தெரிவித்திருந்தார் அந்த இளைஞர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி
அந்த வீடியோவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி இரண்டாம் எலிசபெத் ராணியை கொலை செய்யப் போகிறேன். இன அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கான பழிவாங்கும் நடவடிக்கை இது. நான் இந்திய சீக்கியர். என் பெயர் ஜஸ்வந்த்சிங் செயில். என் பெயர் டார்த் ஜோன்ஸ். இவ்வாறு அந்த வீடியோவில் சீக்கிய இளைஞர் முகத்தை மறைத்தபடி பேசியிருந்தார். அந்த இளைஞர் தெற்கு இங்கிலாந்து பகுதியில் வசித்து வந்தவர்.

102 ஆண்டுகளுக்குப் பின்..
102 ஆண்டுகள் கழித்து ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காக மற்றொரு பழிவாங்க போகிறேன் என சீக்கிய இளைஞர் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1919-ம் ஆண்டு இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாண்ட போது ஒடுக்குமுறைகளை ஏவ ரெளலட் தலைமையில் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ரெளலட் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் கிளர்ச்சி வெடித்தது.

இனப்படுகொலை
ரெளலட் சட்டத்தை எதிர்த்து 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி ஜாலியன் வாலாபாக்கில் திரண்டிருந்த தேசபக்தர்கள் மீது ஜெனரல் டயர் என்ற பிரிட்டன் தளபதி தலைமையிலான படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அந்த மைதானத்தின் ஒற்றை வாயிலையும் மூடிவைத்து காக்கை குருவிகளைப் போல இந்தியர்களை பிரிட்டன் படை படுகொலை செய்தது. இந்தியர்களின் தீரமிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஜாலியன்வாலாபாக் படுகொலை பெருந்துயரமாகும்.

சர்தார் உதம்சிங்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை இங்கிலாந்தில் 20 ஆண்டுகள் கழித்து சுட்டுப் பழிதீர்த்தார் போராளி உதம்சிங். உதம்சிங்கின் வரலாற்றை சித்தரிக்கும் சர்தார் உதம்சிங் திரைப்படம் அண்மையில் வெளியாகி இருந்தது. இப்போது உதம்சிங் பாணியில் சீக்கிய இளைஞர் வீடியோ வெளியிட்டிருக்கிறார். சர்தார் உதம்சிங் ரிட்டர்ன்?