லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது டீம்.. இப்படித்தான் இருக்கனும் பவுலிங்.. மெர்சல் பண்ணிட்டீங்கப்பா!

Google Oneindia Tamil News

Recommended Video

    WORLD CUP 2019 IND VS SA | முதல் லீக் போட்டியில் பும்ராவின் அற்புதமான துவக்கம்

    லண்டன்: இன்றைய கிரிக்கெட் மேட்ச் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். இத்தனை உலக கோப்பை தொடர்களில், பார்த்த இந்திய அணி இல்லை இது. இது முற்றிலும் வேறு ஒரு அணி.

    கிட்டத்தட்ட 1999, 2003, 2007ம் ஆண்டு உலக கோப்பைகளில் ஆஸ்திரேலிய அணி எப்படி இருந்ததோ, அப்படியான ஒரு வலுவான பவுலிங் அணியாக இப்போது காட்சியளிக்கிறது.

    இதுவரை இந்திய அணி என்றாலே பேட்டிங்கை மட்டுமே நம்பியுள்ள அணியாகவே காட்சியளிக்கும். கவாஸ்கர், சச்சின், கங்குலி, ராகுல் டிராவிட், யுவராஜ்சிங், தோனி, விராட் கோஹ்லி, ரோகித் ஷர்மா என உலகமே உற்றுப் பார்க்கும் பேட்ஸ்மேன்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்து வந்துள்ளது இந்திய அணி.

    ஆனால், உலக கோப்பையில் கபில்தேவ், ஸ்ரீநாத், கும்ப்ளே, ஜாகீர்கான் ஆகியோரின் தனித்தனி சாதனைகளை, தவிர்த்து பார்த்தால், ஒட்டுமொத்தமாக, ஒரே காலகட்டத்தில், சிறந்த பவுலிங் யூனிட்டை இந்தியா பெற்றதில்லை.

    ஏய்.. இவன் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கான்.. ஜாலியா இருக்கே.. கலக்கறீங்களே சீக்கா! ஏய்.. இவன் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கான்.. ஜாலியா இருக்கே.. கலக்கறீங்களே சீக்கா!

    சூப்பர் பவுலர்கள்

    சூப்பர் பவுலர்கள்

    இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை போன்ற நாடுகள் வித்தியாசமானவை. பெரும்பாலான உலக கோப்பை தொடர்களில் பெஸ்ட் பவுலிங் லைன்-அப் வைத்திருந்தன. இந்த ஏக்கம் கண்டிப்பாக ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகருக்குமே உண்டு. ஆனால், விராட் கோலி தலைமையிலான 2019ம் உலக கோப்பை இந்த ஏக்கத்தை விரட்டியடித்துள்ளது.

    பூம், பூம் பும்ரா

    பூம், பூம் பும்ரா

    படையப்பா படத்தில் ரஜினிகாந்த் சொல்வாரே, போடா.. அந்த ஆண்டவனே, நம்ப பக்கம்.. அப்படீன்னு. அந்த மாதிரி, இந்த உலக கோப்பையில், உலகின் நம்பவர் ஒன் பவுலரே நம்ப ஆளுதாங்க. அவர்தான், 'ராக்கெட் சயின்ஸ்' ஜஸ்ப்ரிட் பும்ரா. முட்டிக்கு மேல பந்து எழும்பாத பிட்ச் உள்ள நாட்டுல இருந்து இப்படி ஒரு ஃபார்ஸ்ட் பவுலரா என வியந்து கிடக்கிறது பிற நாடுகள்.

    ராக்கெட் சயின்ஸ்தான்

    ராக்கெட் சயின்ஸ்தான்

    பிரெட்லியோ, அல்லது அக்தர் மாதிரியோ அதிவேகமாக வீசுவதில்லை. மெக்ராத் மாதிரியோ, சமிந்தா வாஸ் மாதிரியோ இரு புறங்களிலும், பயங்கரமாக ஸ்விங்க் செய்வதில்லை. ஆனால் பும்ரா பந்து வீச்சில் ஏதோ ஒரு ராக்கெட் சயின்ஸ் இருக்கு. பந்து பிட்ச் செய்யப்பட்ட பிறகு, அது எடுக்கும் வேகம் இருக்கே, அடேங்கப்பா.

    செம பிக்அப்

    செம பிக்அப்

    கண் இமைக்கும் நேரத்தில், பந்து பேட்ஸ்மேனை கிராஸ் செய்து போகும் அழகை பார்க்க கண்கோடி வேண்டும். இன்றைய போட்டியில் அப்படித்தான். உலகின் பல வேகப்பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தவர், இந்தியாவுக்கு எதிராக பயங்கரமான பேட்டிங் ரெக்கார்ட் வச்சிருப்பவர் என்றெல்லாம் புகழப்பட்ட, டி காக்கிற்கு, பும்ரா வீசிய பந்து எங்கே சென்றது என்பதே புரியவில்லை.

    பந்து கண்ணுக்கே தெரியலைங்க

    பந்து கண்ணுக்கே தெரியலைங்க

    பந்து ஒருபக்கம் போனால், டிகாக் வேறு பக்கம் பேட்டை வைத்துக்கொண்டிருந்தார். கண்களை கசக்கினார், அடேங்கப்பா என வாயில் முனுமுனுத்தார்.. ம்ஹூம்.. ஒன்னும் முடியல. கடைசியில், பும்ராவின் ராக்கெட் வீச்சில் பலியானார் டிகாக். ஏற்கனவே ஆம்லாவும், பும்ரா பந்துக்கு பதில் சொல்ல முடியாமல் வீழ்ந்தார். ஆம்லா லேசுபட்டவர் இல்லை. போட்டியையே தங்கள் அணி பக்கம் கொண்டுவரக்கூடிய திறமை உள்ளவர். அவரையும், டிகாக் மாதிரி ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்தது பும்ராவின் அற்புத பந்து.

    வந்துட்டாங்கல்ல

    வந்துட்டாங்கல்ல

    ஒருவழியாக, பும்ராவின் முதல் ஸ்பெல் முடிந்ததே என்று நினைத்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெருமூச்சு விடுவதற்குள் களத்துக்குள் வந்து கலக்கினர், ஸ்பின் இரட்டையர்களான, குல்தீப் யாதவும், சஹலும். அடேங்கப்பா, ஆளாளுக்கு பந்துகளை, லெக்கிலும், ஆஃப்பிலும், சுழல விட்டு, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தலையை ஸ்பின் செய்துவிட்டனர்.

    சுழன்றடித்த சுழல்

    சுழன்றடித்த சுழல்

    அதிலும், ரஸ்சி வான் டெர் டுச்சேன், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய், கேவலமாக சஹல் பந்தில் அவுட்டானதெல்லாம், சிரிப்பு ரகம். ஆனானப்பட்ட டு பிளெசிசையும், கூக்ளியை போட்டு ஏமாற்றி பௌல்ட் ஆக்கினார் சஹல். மில்லரையும் தனது பந்தில் தானே கேட்ச் பிடித்து, பெவிலியன் அனுப்பி வைத்தார். பொறுத்து பார்த்தார், குல்தீப். டும்னியிடம் பொங்கிவிட்டார். ஆம், அழகான பந்தில் எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றிவிட்டார்.

    கப்பை ரெடி பண்ணுங்கப்பா

    கப்பை ரெடி பண்ணுங்கப்பா

    இந்த கட்டுரை எழுதும் நிமிடம் வரை, ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்க அணியும், இந்த பந்து வீச்சின் இரும்பு கரங்களுக்குள் சிக்கி சிதைபட்ட நிலையில்தான் இருந்தது. எந்த ஒரு பவுலரையும் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால், அடித்து ஆட முடியவில்லை. இப்போ புரியுமே, ஏன் நமது பவுலிங் யூனிட்டை, பழைய ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிடுகிறோம் என்று! இதே ஃபார்மில் நமது பவுலர்கள் இருந்தால் போதுங்க. மற்ற விஷயத்தை நமது பேட்ஸ்மேன்கள் சிம்பிளாக முடித்துவிடுவார்கள்.

    யப்பா.. அந்த கப்ப தொடச்சி வைங்கப்பா.. இந்தா வந்துகிட்டே இருக்கோம்!

    English summary
    South African batsmen have no answer for Indian bowling atatck in the World cup match.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X