லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் நேற்று அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்.. அத்தனை நாடுகளுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை

Google Oneindia Tamil News

லண்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பார்த்தால் இத்தாலி , ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் நேற்று உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தது.

Recommended Video

    கொரோனாவுக்கு எதிராக சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நானோ ஆயுதம்

    உலகிலேயே மிக அதிகபட்சமாக இத்தாலியில் 12428 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் 105 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் இத்தாலியில் 837 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இரண்டாவதாக அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் 748 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை 4053 பேர் இறந்துள்ளனர். அங்கு நேற்று மட்டும் 24742 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 188530 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    பிரான்சில் 499 பேர் பலி

    பிரான்சில் 499 பேர் பலி

    அதிக இறப்பில் 3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 748 பேர் உயிரிழந்துள்ளனர், ஒட்டுமொத்தமாக 8464 பேர் உயிரிழந்துள்ளனர். 95923 பேர் ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் புதிதாக 7967 பேர் பாதிக்கப்பட்ட்டனர். பிரான்சில் நேற்று ஒரேநாளில் 499 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 3523 ஆக அதிகரித்தது. பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் 52128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 7578 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டனர்.

    பெல்ஜியத்தில் 192 பேர் பலி

    பெல்ஜியத்தில் 192 பேர் பலி

    இங்கிலாந்தில் நேற்று ஒரேநாளில் 381 பேர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 3009 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25150 ஆக உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் நேற்று மட்டும் 192 பேர் உயிரிழந்ததால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது. நேற்று புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்டதால் 12595 ஆக அதிகரித்துள்ளது.

    பாதிப்பு 12595 ஆக உயர்வு

    பாதிப்பு 12595 ஆக உயர்வு

    நெதர்லாந்தில் மார்ச் 31ம் தேதியான நேற்று மட்டும் 176 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1039 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 845 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12595 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் நேற்று 141 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 2898 ஆக உயர்ந்துள்ளது.

    ஜெர்மனியில் 130 பேர் பலி

    ஜெர்மனியில் 130 பேர் பலி

    ஈரானில் நேற்று 310 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரை மொத்தமாக 44605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் நேற்று 130 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் 4923 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஜெர்மனியில் மொத்தமாக 71808 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உயிரிழப்பு அதிகம்

    உயிரிழப்பு அதிகம்

    உயிரிழப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகள் அனைத்துமே மிகுந்த குளிர் பிரதேசங்கள் ஆகும். மேற்கண்ட நாடுகள் எல்லாமே 15 டிகிரி செல்சியஸ்க்கும் குறைவான வெப்ப நிலை உள்ள நாடுகள் ஆகும். அதேநேரம் வெயில் அதிகம் உள்ள நாடுகள் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதும் உண்மை. ஆம் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரக்க நாடுகளில் உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை. குளிர் பிரதேச நாடுகளை ஒப்பிடும் போது பாதிப்பும் பெரிதாக இல்லை.

    English summary
    coronavirus death toll in world : Spain, Italy, US, France, UK had deadly day yesterday as world death figure breach 42,000
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X