லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இத்தாலிக்கு அடுத்து அதிக பாதிப்பு ஸ்பெயினுக்குத்தான்.. பின்னணியில் 'அரசியல்' காரணம்.. திடுக் தகவல்

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பாவில் இத்தாலிக்கு பிறகு அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடு ஸ்பெயின்தான். ஸ்பெயினின் இறப்பு எண்ணிக்கை 1,700 என்ற அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு அங்குள்ள அரசியல் நிலையும் ஒரு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய ஞாயிற்றுக்கிழமை 1,326 ஆக இருந்த ஸ்பெயினின் இறப்பு எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 1,720 ஆக உயர்ந்தது. நோய் பாதித்தோர் எண்ணிக்கை, 24,926 என்ற அளவிலிருந்து 28,572 ஆக பதிவாகியுள்ளது. ஸ்பெயின் தற்போது நாடு தழுவிய லாக்டவுன் நிலையில் உள்ளது.

ஐரோப்பாவின் இரண்டாவது மிக மோசமான கொரோனா பாதிப்பு பரவல் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. அந்த நாட்டு பிரதமர் நாட்டில் 15 நாள் அவசரகால நிலையை மார்ச் 14 அன்று முதலில் அறிவித்தார், மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளார்.

கொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு கொரோனா தடுப்புக்கு ரூ 500 கோடி நிதி.. முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

பிரதமர் பாராட்டு

பிரதமர் பாராட்டு

இந்த நெருக்கடி ஸ்பானியர்களில் "சிறந்ததை வெளிப்படுத்துகிறது" என்று பிரதமர் ஊக்கம் கொடுக்கும் வகையில் கூறினார், பொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை மதிக்கும் குடிமக்கள் இவர்கள் என பாராட்டினார், அதே நேரத்தில் பொறுப்பற்ற தன்மை வாழ்க்கையை அழிக்கிறது என்று எச்சரித்தார். மரணங்கள் அதிகரித்து வருவதால் அவசரகால நிலையை விரிவுபடுத்த யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

அத்தியாவசியம்

அத்தியாவசியம்

வேலை, அத்தியாவசிய பொருட்களுக்கான ஷாப்பிங், நடைபயிற்சி நாய்கள் உள்ளிட்ட சில விதிவிலக்குகளுடன் மக்கள் வீட்டில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு, அபராதம் விதித்தல் மற்றும் கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.

யோசனை

யோசனை

ஸ்பெயின் இப்போது உலகின் நான்காவது பெரிய கோவிட் -19 பாதிப்பை கொண்டுள்ளது. ஐரோப்பா முழுவதிலும் இத்தாலிக்கு அடுத்தபடியாக 2வது நாடாக உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க, அரசு லாக்டவுனை நீட்டிக்க அரசு யோசித்து வருகிறது. இன்னும் முடிவு எடுக்கவில்லை.

அரசியல்

அரசியல்

பிரதமர் சான்செஸ், சிறுபான்மை அரசை தலைமை தாங்கி வருகிறார். எனவே அதிரடி முடிவுகளை எடுக்க முடியவில்லை. பெரிய கூட்டங்களைத் தடை செய்வதன் மூலம் மக்கள் கோபம் ஆட்சிக்கு எதிராக திரும்பிவிடும் என அச்சப்பட்டார். அவர் கடந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் கால்பந்து விளையாட்டுகளில் கலந்து கொள்ள அனுமதித்தது இதற்கு ஒரு உதாரணம். அதே போல் மாட்ரிட்டில் 120,000 பேர் பங்கேற்ற பெண்ணியவாதிகள் பேரணியை தொடர அனுமதித்தார். ஒரு அரசு பலவீனமாக இருந்தால், அது நாட்டை எப்படி பாதிக்கும் என்பதற்கு, இதுவும் ஒரு உதாரணமாகும்.

English summary
The politics alone are daunting. Prime Minister Pedro Sánchez, weak after forming a minority government, likely didn’t want to risk his fragile hold on power by banning large gatherings, experts say. Instead, he allowed thousands to attend soccer games last week, as well as permitted a 120,000-strong feminist rally in Madrid to proceed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X