லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெம் செல் மூலம் ஹெச்.ஐ.விக்கு அளித்த சிகிச்சை வெற்றி!

ஹெச்.ஐ.வி நோயாளி ஒருவரை ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளார் இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெம் செல் மூலம் ஹெச்.ஐ.விக்கு சிகிச்சை அளிக்கலாம் -வீடியோ

    லண்டன்: இங்கிலாந்தில் ஹெச்.ஐ.வி. நோயாளி ஒருவர் ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சை மூலம் குணமாகி இருப்பது மருத்துவ உலகின் மற்றொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    விஞ்ஞானத்தின் உதவியால் கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பது ஒரு புறம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அதன்படி சமீபகாலமாக ஸ்டெம் செல் மூலமாக பல அரிய நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது நவீன மருத்துவம்.

    அந்தவகையில் உயிர்க்கொல்லியாக கருதப்படும் ஹெச்.ஐ.வி. வைரஸ் தாக்குதலுக்கும் ஸ்டெம் செல் மூலம் தீர்வு கண்டுள்ளனர். மருத்துவ உலகின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாக கருதப்படும் இதனைக் கண்டு பிடித்திருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திர குப்தா ஆகும்.

    கொஞ்சமும் பிடிக்கலை.. ஆனாலும், தேமுதிகவை உதற முடியுாமல் அதிமுக தவிப்பது ஏன் தெரியுமா கொஞ்சமும் பிடிக்கலை.. ஆனாலும், தேமுதிகவை உதற முடியுாமல் அதிமுக தவிப்பது ஏன் தெரியுமா

    எய்ட்ஸ் நோயாளி

    எய்ட்ஸ் நோயாளி

    இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2003ம் ஆண்டு ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குதலுக்கு ஆளானார். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொல்ல வல்லதான இந்த கிருமி தாக்குதலால், அவருக்கு கடந்த 2012ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டது. புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், கூடவே ஹெச்.ஐ.விக்கும் மருந்து சாப்பிட்டு வந்தார்.

    டாக்டர் ரவீந்திர குப்தா

    டாக்டர் ரவீந்திர குப்தா

    இது ஒருபுறம் இருக்க, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியரும், இந்திய வம்சாவளி மருத்துவருமான ரவீந்திர குப்தா தலைமையில், அவருடன் பணியாற்றும் பேராசிரியர்கள், லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹெச்.ஐ.வி. கிருமிக்கு சிகிச்சை அளிப்பது பற்றி ஆய்வு நடத்தி வந்தனர்.

    ஸ்டெம்செல் சிகிச்சை

    ஸ்டெம்செல் சிகிச்சை

    அதன் முடிவில் ஹெச்.ஐ.வி தாக்கியருக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளித்தால் குணமாவார்கள் என அவர்கள் கண்டுபிடித்தனர். அதன்படி, லண்டன் நோயாளிக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்க அவர்கள் முடிவு செய்தனர்.

    ஸ்டெம்செல் தானம்

    ஸ்டெம்செல் தானம்

    இதற்காக எச்.ஐ.வி. பாதிக்காத ஒருவரிடம், நோயாளியின் இரத்தத்தோடு பொருந்தும் வகையிலான ஸ்டெம் செல் தானமாக பெறப்பட்டது. பின்னர் அந்த ஸ்டெம் செல்லை சம்பந்தப்பட்ட நோயாளிக்கு வெற்றிகரமாக செலுத்தினர் மருத்துவர்கள். இந்த சிகிச்சைக்குப் பின் சம்பந்தப்பட்ட நோயாளியின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. கடந்த 18 மாதங்களாக அவர் ஹெச்.ஐ.விக்காக எடுத்து வந்த மருந்துகளை நிறுத்தி விட்டார்.

     இதுவே முதல்முறை

    இதுவே முதல்முறை

    ஆனால், இப்படி ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி தாக்கிய நபரை குணமாக்குவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, 10 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியின் பெர்லின் நகரை சேர்ந்த தீமொத்தி பிரவுன் என்பவருக்கு இதேபோல், முதல் முறையாக ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற்றுத்தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மருத்துவ உலகின் மைல்கல்

    மருத்துவ உலகின் மைல்கல்

    உலகமெங்கும் ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் பேர் ஹெச்.ஐ.வி கிருமி தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். வருங்காலத்தில் இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க, நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையைத் தொடர வேண்டும் என்பது தான் ஆராய்ச்சியாளர்கள் பலரது கோரிக்கையாக இருக்கிறது.

    English summary
    A milestone in the medical history, the london doctors saved a aids patient with the help of stemcell treatment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X