மார்போடு "மாப்பிள்ளையை" அணைத்து.. ஹவுஸ்ஓனர் தந்த டார்ச்சரால் பெண் செய்த காரியம்.. ஹைலைட் பாருங்க
லண்டன்: ஹவுஸ் ஓனர் கொடுத்த டார்ச்சரால், இளம்பெண் ஒருவர் செய்த காரியம் சோஷியல் மீடியா முழுக்க வைரலாகி வருகிறது.
உலக ஃபேமஸ் ஆவதற்காக வித்தியாசமான முயற்சிகளை சிலர் மேற்கொள்வார்கள்.. சிலர் ஆபத்தான செயலிலும், சிலர் அபார ஆற்றலிலும் பல்வேறு செயல்களை புரிந்து, உலக மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவது வழக்கம்.
மேலும் சிலர் மகா மட்டமான காரியங்களை செய்தே பரபரப்பாக பேசப்பட்டு விடுவார்கள்.. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு இளைஞர், அரிசி வேக வைக்கும் குக்கரை கல்யாணம் செய்து கொண்டார்..

கூறு கெட்ட குக்கர்
இது தொடர்பான போட்டோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. அந்த போட்டோவில் மாப்பிள்ளை கோலத்தில் காணப்பட்ட அந்த இளைஞர், கையோடு அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஒரு குக்கரை முக்காடு போட்டு கொண்டு ரிஜிஸ்தர் ஆபீசுக்கு கொண்டு வந்து, திருமணமும் செய்து கொண்டார். இதற்கு இவர் சொன்ன காரணம், "குக்கர் நான் சொல்வதை எல்லாம் கேட்கிறது.. குக்கர் வெள்ளையாக இருக்கிறது.. எனக்கு சாப்பாடு வேகவைத்து தருகிறது.. என்னிடம் அன்பாக இருக்கிறது" என்றார்.

டைவர்ஸ்
பிறகு கல்யாணம் செய்த 4 நாட்களிலேயே அந்த குக்கரை டைவர்ஸ் செய்துவிட்டார்.. அப்போது அவர் சொன்ன காரணம், அந்த குக்கர் அரிசியை மட்டுமே வேக வைக்கிறது, அதனால்தான் விவாகரத்து செய்கிறேன்" என்றார்.. இப்படித்தான் பிரேசிலும் ஒரு சம்பவம் கடந்த செப்டம்பரில் நடந்தது. அந்த நாட்டின் மாடல் அழகி, தன்னை தானே கல்யாணம் செய்து கொண்டார்.. அவர் பெயர் கிறிஸ் கலேரா.. 31 வயதாகிறது.

திருமணம்
"எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை.. ஆனால், எந்த ஒரு ஆண்மகனும் தனக்கு திருமணம் செய்ய கிடைக்கவில்லை... ஆனால், தனித்து வாழ கொஞ்சம் பயமாக இருந்தது... ஆனால் அதுவே இப்போது பழகி போயிடுச்சு.. அதனால் நானே என்னை பார்த்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்துவிட்டதால், நானே என்னை திருமணம் செய்து கொண்டேன்" என்று அறிவித்திருந்தார்.

மோகம் 90 நாள்
ஆனால், கல்யாணம் செய்து 90 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த பெண் தனக்கு தானே டைவர்ஸ் கேட்டார்.. அதற்கும் ஒரு காரணத்தை சொன்னார்.. "எனக்கு இப்போது காதல் மீது நம்பிக்கை வந்துவிட்டது.. காதல் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டேன்.. நான் என்னுடைய கனவு மனிதரை சந்தித்துவிட்டேன்.. அதனால், நான் என்னை திருமணம் செய்து கொண்டதை விவாகரத்து செய்கிறேன்" என்றார்.

ஹவுஸ் ஓனர்
இந்த வரிசையில்தான் இன்னொரு பெண் சேர்ந்துள்ளார்.. அவர் இங்கிலாந்தை சேர்ந்தவர்.. சிட்காப் தெபொரோ என்று பெயர்.. 40 வயதாகிறது.. எனும் பகுதியில் வசித்து வருகிறார்.. இவர் ஒரு பூனையை வளர்த்து வருகிறார்.. இந்த பூனையை வீட்டில் வைத்து வளர்ப்பது, அவரது வீட்டின் உரிமையாளருக்கு பிடிக்கவில்லை.. அவர் கண்ணில் பூனை தென்பட்டாலே அடித்து விடுவார்.. பூனையை வீட்டுக்குள் வைத்திருக்க கூடாது, வெளியேற்றுங்கள் என்று பெண்ணிடம் அந்த வீட்டு ஓனர் எச்சரித்து கொண்டே இருப்பாராம்..

மாப்பிள்ளை
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், அந்த பூனையை தெபொரா கல்யாணமே செய்து கொண்டார்.. மாப்பிள்ளை போல் பூனைக்கு அலங்காரம் செய்தார்.. "இப்போ நாங்கள் புதுமண தம்பதி.. இவர்தான் மணமகன்.. நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம்.. இதோ போட்டோ" என்று ஹவுஸ் ஓனரிடம் காண்பித்துள்ளார்.. அந்த போட்டோவில் மாப்பிள்ளையை மார்போடு அணைத்து கொண்டிருந்தார் தெபொரோ.. இந்த போட்டோவை பார்த்ததும் ஹவுஸ் ஓனர் மிரண்டு போய்விட்டார்.. இந்த தம்பதி போட்டோக்கள்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஹவுஸ் ஓனர்
இது குறித்து பேசியுள்ள தெபொரா, "இனி எனக்கு இழப்பதற்கும் எதுவும் இல்லை, புதிதாக எதுவும் கிடைக்கபோவதுமில்லை... ஏற்கனவே நான் எனது 2 குழந்தைகளை இழந்துள்ளேன். அதனால் தான் இந்த பூனையையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொண்டுள்ளேன்... என் பூனையை எப்பொழுதும் பிரிய மாட்டேன். எங்களை யாராலும் பிரிக்க முடியாது" என்கிறார்.. அந்த பூனை மணப்பெண் மார்பில் சாய்ந்து கொண்டு போஸ் கொடுக்கிறது.. இன்னொரு ஹைலைட் என்ன தெரியுமா? அந்த பூனை பெயர் "இந்தியா"..!