லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை.. லண்டன் தேம்ஸ் நதியே வறண்டு போனதா?.. என்ன தான் நிலைமை!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உலகப் புகழ் பெற்ற நதிகளில் ஒன்றான தேம்ஸ் நதியிலேயே தண்ணீர் இருப்பு குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் ஓடும் தேம்ஸ் நதி உலகப் புகழ்பெற்ற நதிகளில் ஒன்று என சொன்னால் அது மிகையல்ல.

முழுவதும் இங்கிலாந்திற்கு உள்ளே ஓடும் நீளமான ஆறாகவும் ஐரோப்பிய யூனியனில் இரண்டாவது மிகப் பெரிய ஆறாகவும் தேம்ஸ் விளங்குகிறது. சுத்தமான ஆறுகளுக்கு எடுத்துக்காட்டாகவும் பலராலும் அடிக்கடி சொல்லப்படும் ஆறு லண்டன் தேம்ஸ் ஆகத்தான் இருக்கும்.

பாஜகவை கழட்டிவிட பல மாதங்களுக்கு முன்பே போடப்பட்ட மாஸ்டர் பிளான்! நிதிஷ் குமார் பக்கா ஸ்கெட்ச் பாஜகவை கழட்டிவிட பல மாதங்களுக்கு முன்பே போடப்பட்ட மாஸ்டர் பிளான்! நிதிஷ் குமார் பக்கா ஸ்கெட்ச்

தேம்ஸ் ஆறு

தேம்ஸ் ஆறு

லண்டன் முழுவதும் பாயும் இந்த ஆறு தென்கிழக்கு இங்கிலாந்து வரை செல்கிறது. குளோசெஸ்டர்ஷைரில் தொடங்கி எஸ்ஸெக்ஸ் மாகாணத்தின் கிழக்கு கடலில் கலக்கிறது. இந்த நமதி 215 மைல்கள் அதாவது 356 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இத்தகைய புகழ் கொண்ட தேம்ஸ் நதியும் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் முழுமையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலை வீசி வருகிறது. வரலாறு காணாத வெப்பத்தால் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தகிக்கின்றன்.

அதிக அளவு வெப்பநிலை

அதிக அளவு வெப்பநிலை

கிட்டத்தட்ட சுமார் 1935 ம் ஆண்டுக்குப் பின்னர் நடப்பு ஆண்டின் ஜூலை மாதத்தில் தான் அதிக அளவு வெப்பநிலை வீசியதாகவும், அதிக அளவு வறட்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தில் சராசரி மழைப்பொழிவு 23.1 மிமீட்டர்தான். இது இந்த மாதத்தின் சராசரி மழைப்பொழிவில் வெறும் 35% மட்டுமே. மேலும் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலையும் உயர்ந்து வருவதால் நாட்டில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

வறண்டு போன இயற்கை அருவி

வறண்டு போன இயற்கை அருவி

ரயில்வே சிக்னல்கள் வரும் வெப்பத்தின் தாக்கத்தால் உருகிய காட்சிகள் அங்கு நிலவிய அதீத வெப்பத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தின. இப்படி கடுமையான வெப்பத்தால் தகிக்கும் இங்கிலாந்தில் நீர்நிலைகளும் வறட்சியடைந்து வருகின்றன. அந்த வகையில், தேம்ஸ் நதிக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் இயற்கை அருவி வறண்டு விட்டது. பெரும்பாலான கோடைக்காலங்களில் இந்த நதியின் முக்கிய ஆதராமாக உள்ள அருவி வறண்டிருந்தாலும் நடப்பு ஆண்டில் ஆற்றின் படுகை மேலும் வறட்சி அடைந்துள்ளது. இதனால், தேம்ஸ் நதியின் நீர்மட்டம் பல இடங்களில் குறைந்துள்ளது.

தற்காலிக தடை

தற்காலிக தடை

தேம்ஸ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் இயங்கும் இரண்டு மிகப்பெரிய நீர் நிறுவனங்களுக்கு நீரை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுமார் 1.5 கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக தேம்ஸ் நதியின் நீர் உள்ளது. இதனால், வறட்சியை எதிர்கொள்ளும் நிலைக்கு இங்கிலந்து சென்று கொண்டிருக்கிறது. ஏற்கெனவே வெப்பம் வாட்டி வரும் நிலையில் இங்கிலாந்தில் நான்கு நாட்களுக்கு அதி தீவிர வெப்பம் வாட்டி வதைக்கும் என்று எச்சரிக்கையும் நேற்று விடுக்கப்பட்டுள்ளது.

40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

அடுத்த 4 நாட்களுக்கு இங்கிலாந்தின் அநேக இடங்களில் அதீத வெப்பம் நிலவும், புதிய வெப்ப அலைகள் உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் அதிகமாக உயரலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பத்தின் தாக்கம் இங்கிலாந்தை சுற்றியுள்ள அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளிலும் இருக்கும். 1935-ம் ஆண்டுக்கு பின்னர், கடந்த ஜூலை மாதம் தான் இங்கிலாந்தின் மிகவும் வெப்பமான ஜூலையாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Due to the increased temperature in England, it is said that the water availability of the Thames, one of the world's famous rivers, has decreased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X