லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.. இங்கிலாந்து ராணுவ தளபதி வார்னிங்!

Google Oneindia Tamil News

லண்டன்: 3ஆம் உலகப் போர் ஏற்படுத்துவதற்கான ஆபத்து உண்மையில் உள்ளதாக இங்கிலாந்து முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் ஒரு செய்தி நிறுவனத்திற்கு கூறுகையில் பொருளாதார நெருக்கடிகள் பல காலங்களில் பாதுகாப்பு நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளன.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த சூழல் பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும். நாம் அனைவரும் தற்போது மிகவும் நிச்சயமற்ற உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆப்கானிஸ்தானில் காரில் குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்கும்?ஆப்கானிஸ்தானில் காரில் குண்டுவெடிப்பு.. பலி எண்ணிக்கை அதிகரிக்கும்?

உண்மையான ஆபத்து

உண்மையான ஆபத்து

தற்போது பல பகுதிகளில் நடந்து வரும் மோதல்கள் தவறான முடிவுகள் காரணமாக மிக விரைவில் முழுமையான போராக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுதான் தற்போது மிகவும் உண்மையான ஆபத்து. அதிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.

ஆயுதங்கள்

ஆயுதங்கள்

சண்டையில் ஈடுபடுவோர் தங்கள் செயல்களால் போர் ஏற்படலாம் என்ற உண்மைநிலையைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறார்கள். இதனால் நீங்கள் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாகவே அதிக அளவிலான நபர்களும், ஆயுதங்களும் சண்டையில் ஈடுபடுத்தப்படலாம்.

ஆபத்துகள்

ஆபத்துகள்

இது நாடுகளுக்கு இடையே முழுமையான போருக்கு நம்மை கொண்டு செல்லும். வரலாற்று நிகழ்வு மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். 3ஆம் உலகப் போர் உண்மையிலேயே ஏற்படுமா என்றால் அதற்கான ஆபத்துகள் உள்ளது என்றே கூறுகிறேன்.

கவனம்

கவனம்

அந்த அபாயங்கள் குறித்து நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். வரலாற்றை திருப்பி பார்க்கும்போது நீங்கள் அதிலிருந்து உங்கள் அனுபவங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் பிராந்திய மோதல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வழிவகுக்கும்

வழிவகுக்கும்

இது போன்ற மோதல்கள் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்றார். பிராந்திய மோதல்கள் எவை என்பது குறித்து தளபதி கார்டர் தெளிவுப்படுத்தவில்லை என்றாலும் அர்மீனியா- அசர்பைஜன் மோதல். சிரியாவில் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, இங்கிலாந்து படைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

English summary
There will be risk of 3rd world war, says UK armed forces General Nick Karter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X