லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்தில் ஆளும் கட்சி எம்.பி. சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை.. தீவிரவாத தாக்குதல் என சந்தேகம்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி. டேவிட் அமெஸ் என்பவர் பட்டப் பகதில் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டேவிட் அமெஸ். 69 வயாதகும் சீனியர் உறுப்பினராகும்.

இவர் நேற்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களை சந்தித்தார்.

குலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிய குவியும் பக்தர்கள் - கொடியேற்றம், சூரசம்ஹாரம் காணத் தடைகுலசை தசரா : முத்தாரம்மன் கோவிலில் மாலை அணிய குவியும் பக்தர்கள் - கொடியேற்றம், சூரசம்ஹாரம் காணத் தடை

சரமாரி கத்தி குத்து

சரமாரி கத்தி குத்து

அப்போது திடீரென ஒரு இளைஞர் டேவிட் அமெஸை கத்தியால் குத்தினார். பலமுறை அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடினார்.
தகவல் அறிந்ததும், அங்கு வந்த போலீஸார் அந்த மர்ம நபரைக் கைது செய்தனர். அந்த நபருக்கு 25 வயது என்பதை மட்டும் உறுதி செய்தனர் மற்ற விவரங்கலை தெரிவிக்கவில்லை.

 தொடர் கதை

தொடர் கதை

இதனிடையே டேவிட் அமெஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஐந்து வருடங்களில் இரண்டாவது முறையாக, பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் பொது இடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

 தீவிரவாத தாக்குதல்

தீவிரவாத தாக்குதல்

முதல் கட்ட விசாரணையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அமைப்புக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். டேவிட் அமெஸ், நீண்ட காலம் எம்பியாக பணியாற்றியவர். மென்மையாக பேசக் கூடியவர்.

மோசமான நாள்

மோசமான நாள்

எசெக்ஸ் காவல்துறையின் தலைமை அதிகாரி பென்-ஜூலியன் ஹாரிங்டன் இதை ஒரு "சோகமான நாள்" என்று தெரிவித்துள்ளார்.
2016 ல் இதேபோன்ற தாக்குதல் பிரெக்ஸிட்டை எதிர்த்த தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஜோ காக்ஸ் மீது நடத்தப்பட்டது. ஒரு வலதுசாரி தீவிரவாதி ஜோ காக்ஸ்சை குத்திக் கொன்றார்.

பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரதமர் போரிஸ் ஜான்சன்

2010ல், மற்றொரு தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் டிம்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இரண்டு முறை அடிவயிற்றில் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்துக் கொண்டார். பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், டேவிட் அமெஸ் இந்த நாட்டையும் அதன் எதிர்காலத்தையும் தீவிரமாக நம்பிய ஒரு மனிதர், இன்று நாம் ஒரு சிறந்த பொது ஊழியர் மற்றும் மிகவும் நேசிக்கப்பட்ட நண்பர் மற்றும் சக ஊழியரை இழந்துவிட்டோம் என்று

English summary
For the second time in little more than five years, a British lawmaker meeting with constituents was killed in full view of the public, this time in a genteel seaside town, where the victim, a Conservative Party member of Parliament, was fatally stabbed on Friday inside a church.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X