லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா.. ஒரே நாளில் 57,725 பேர் பாதிப்பு.. இதுவரை இல்லாத அதிகரிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 57,725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. பழைய வகை கொரோனா வைரசைவிடவும், இது 70 சதவீதம் வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

UK confirmed with 57,725 people being infected with the corona virus in 24 hours

இந்த நிலையில்தான், கொரோனா வைரசுக்கு எதிராக, அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஆரம்பித்துள்ளது. ஆனால், உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டில் பெரும் தொல்லை கொடுத்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்... பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிறப்பாக கையாண்டது இந்தியா- ஐசிஎம்ஆர்உருமாறிய கொரோனா வைரஸ்... பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, சிறப்பாக கையாண்டது இந்தியா- ஐசிஎம்ஆர்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6வது இடத்தில் உள்ள நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 57,725 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,99,789 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால், பிரிட்டனில், ஒரே நாளில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 74,570 ஆக அதிகரித்துள்ளது.

English summary
A new peak in the UK has been confirmed with 57,725 people being infected with the corona virus in 24 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X