லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெளியில் போக வழியில்லை.. வீட்டுக்குள்ளேயே பீச்சை உருவாக்கிய எமி.. என்னமா யோசிக்கிறாய்ங்க!

இங்கிலாந்து குடும்பம் ஒன்று, தங்களது வீட்டு பின்புறத்தில் பீச் ஒன்றை உருவாக்கி ஜாலியாக நேரத்தை கழித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா ஊரடங்கால் ஊர் சுற்ற முடியாமல் அவதிப்பட்ட இங்கிலாந்து குடும்பம் ஒன்று, தங்களது வீட்டையே சுற்றுலா தளமாக மாற்றி இருக்கிறது.

Recommended Video

    வெளியில் போக வழியில்லை.. வீட்டுக்குள்ளேயே பீச்சை உருவாக்கிய எமி - வீடியோ

    கொரோனா ஊரடங்கால் வெளியே போக முடியாமல், வீட்டுக்குள்ளே இருக்கும்படியாகிவிட்டதே என கவலைப்படுபவரா நீங்கள். அப்படி என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்.

    பொதுவாக வாரவிடுமுறை நாட்களில் பீச், பார்க், தியேட்டர் என குடும்பத்துடனோ, நண்பக்களுடனோ சென்று பொழுது போக்குவது பெரும்பாலானர்களின் வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் வீட்டு படிக்கட்டைக்கூட தாண்ட முடியாத நிலையில் தவித்து வருகிறோம்.

    வீட்டில் பீச்

    வீட்டில் பீச்

    நம்மை போலவே இப்படி தவித்த இங்கிலாந்து குடும்பம் ஒன்று, தங்களது வீட்டு பின்புறத்தில் ஒரு பீச்சையே உருவாக்கி இருக்கிறார்கள். எமி ஊலன் எனும் 22 வயது பெண், தனது வீட்டின் பின்புறத்தில் அரை டன்னுக்கும் அதிகமான பீச் மணல் இருப்பதை பார்த்திருக்கிறார்.

    எமியின் யோசனை

    எமியின் யோசனை

    அப்போது அவரது மூளையில் ஒரு மணி அடித்திருக்கிறது. இந்த மணலை பயன்படுத்தி வீட்டிலேயே ஒரு பீச் உருவாக்கினால் என்ன என யோசித்தவர், தனது குடும்பத்தாரிடம் இந்த யோசனையை தெரிவித்திருக்கிறார். வீட்டு சுவரை முறைத்து பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு எமியின் இந்த யோசனை குதூகலத்தை ஏற்படுத்த, உடனே அனைவரும் களத்தில் இறங்கி வீட்டின் பின்புறம் பீச்சையே உருவாக்கிவிட்டனர்.

    குடும்பத்துடன் குதூகலம்

    குடும்பத்துடன் குதூகலம்

    மணலை தரையில் பரப்பி, அதில் நாற்கலிகளை போட்டு, கூடவே ரப்பர் ஸ்விம்மிங் பூலில் தண்ணீர் நிரப்பி, கையில் கால்டெயிலுடன் ஜெகஜோதியாக குடும்பமே குதூகலித்து வருகிறது. இந்த வீடியோவை இணையதளத்தில் போட்டு மற்றவர்களை வெறுப்பேற்றியிருக்கிறார் எமி.

    கடற்கரையின் பெயர்

    கடற்கரையின் பெயர்

    வீட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த கடற்கரைக்கு, எமியின் பெயரையே வைத்திருக்கிறார்கள். எமி பீச் வீடியோ தான் இப்போது இணையத்தின் டிரெண்டிங்.

    English summary
    In a viral video, a UK based family have created a artificial beach in their house backyard to beat Corona quarantine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X