லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‘பாமெர்ஸ்டன்’ ஓய்வு பெறப் போறாராம்.. எலி பிடிக்கிற வேலைக்கு யாராவது அப்ளை பண்ணப் போறீங்களாய்யா?

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த பூனை ஓய்வு பெறுகிறது.

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் எலி பிடிக்கும் அதிகாரியாக வேலை பார்த்து வந்த லார்ட் பாமெர்ஸ்டன் எனும் பூனை நான்கு ஆண்டுகள் சேவைக்கு பிறகு ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக எலியைக் கண்டால் பூனைக்கு ஆகாது, பூனையை கண்டால் எலிக்கு ஆகாது. ஜென்ம விரோதிகளான இவை இரண்டும் எப்போதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. எனவே தான் எலி தொல்லை அதிகம் இருக்கும் வீடுகளில், பூனைகளை வளர்ப்பார்கள்.

அந்த வகையில் லண்டனில் உள்ள இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் எலி தொல்லையை ஒழிக்க லார்ட் பாமெர்ஸ்டன் எனும் பூனையை பணிக்கு அமர்த்தினார்கள். கருப்பு - வெள்ளை நிற பூனையான லார்ட் பாமெர்ஸ்டன் எலி பிடிப்பதில் செம கெட்டி. அதனால் அதை அனைவருக்கும் பிடித்துவிட்டது.

நைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூக்கு போட்டு கொண்ட போலீஸ்காரர்!நைட் வீட்டுக்கு வந்து.. அம்மா சேலையை தேடி எடுத்து.. கொட்டகையில் தூக்கு போட்டு கொண்ட போலீஸ்காரர்!

ஊரடங்கால் விடுமுறை

ஊரடங்கால் விடுமுறை

கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த பாமெர்ஸ்டன் கடந்த நான்கரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், தற்போது அந்த பூனை வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவரின் வீட்டில் இருக்கிறது.

ஆகஸ்ட்டில் ஓய்வு

ஆகஸ்ட்டில் ஓய்வு

இந்த சூழலில் லார்ட் பாமெர்ஸ்டன் ஆகஸ்ட் மாத இறுதியில் ஓய்வு பெற இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அதிகாரி சைமன் தெரிவித்துள்ளார். "பேட்டர்சீ அமைப்பிடம் இருந்து கடந்த 2016ம் ஆண்டு பாமெர்ஸ்டன் எங்களிடம் வந்தது. நான்கரை ஆண்டுகால பணிக்கு பிறகு பாமெர்ஸ்டன் ஆகஸ்ட் இறுதியில் ஓய்வு பெறுகிறது.

கிராம வாழ்க்கை

கிராம வாழ்க்கை

இந்த ஊரடங்கு சமயத்தில் கிராமத்தில் இருந்து அது பழகிவிட்டது. அங்கே இருக்கத்தான் அது விரும்புகிறது. வெளியுறவுதுறை அலுவலகத்தில் உள்ள அனைவரும் அதை மிஸ் செய்வோம்", என அவர் சோகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலோயர்கள் வருத்தம்

பாலோயர்கள் வருத்தம்

பாமெர்ஸ்டன் பூனை சமூகவலைதளங்களில் ஏற்கனவே மிக பிரபலம். அந்த பூனையை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள். அதன் ஒவ்வொரு புகைப்படமும் லைக்ஸ்குகளை அள்ளிக்குவிக்கும். எனவே பாமெர்ஸ்டன் ஓய்வு பெறப்போகும் செய்தி கேட்டு அதன் பாலோர்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.

English summary
The UK rescue cat Lord Palmerston which was working as mouse catcher at the foreign and Commonwealth Office (FCO) in London has retired after 4 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X