லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரிட்டன் தேர்தலில் இந்திய வம்சாவளியினர் அசத்தல் வெற்றி.. மீண்டும் தேர்வானார் பிரீத்தி

Google Oneindia Tamil News

லண்டன்: கன்சர்வேடிவ் மற்றும் தொழிற்கட்சி ஆகிய இரு கட்சிகளிலும் உள்ள இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் அதிகம் பேர், இங்கிலாந்தின் பொதுத் தேர்தலில் வலிமையான வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். சுமார் ஒரு டஜன் பழைய எம்.பி.க்களுடன், சில புதிய முகங்களும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளன.

முந்தைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் மீண்டும் தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். இவர்களை தவிர, கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ககன் மொஹிந்திரா மற்றும் கிளாரிகவுன்டின்ஹோ மற்றும் தொழிற்கட்சியின் நவேந்திரு மிஸ்ரா ஆகியோர் முதல் முறையாக வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர் ஆகும். ஆக மொத்தம் 15 இந்திய வம்சாவளி எம்பிக்கள் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

UK General Election Results: Indian-origin candidates register win

"எங்கள் சாலைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க ப்ரெக்ஸிட் அவசியம். இதன்பிறகு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் காவல்துறையில் முதலீடு செய்வதற்கான நேரம் ஆரம்பிக்கும்" என்று கோன் வம்சாவளியான கோட்டினோ கூறினார்.

இவர் சர்ரே ஈஸ்ட் டோரி தொகுதியில் 35,624 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மொஹிந்திரா தனது ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் தென்மேற்கு தொகுதியை 30,327 வாக்குகள் பெற்று வென்றார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்! உலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்!

முந்தைய போரிஸ் ஜான்சன் கேபினெட்டில், முக்கிய அங்கம் வகித்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான பிரீத்தி பட்டேலும் வெற்றி பெற்றார். இவர் போரிஸ் அமைச்சரவையில் உள்துறை செயலாளர் பதவி வகித்தார்.

"இந்த ஆண்டின் மிகக் குளிரான நேரத்தில் இது ஒரு கடினமான போராட்டமாகும், ஏனென்றால் எங்களுக்கு பெரும்பான்மை தேவை" என்று பட்டேல் கூறினார். எசெக்ஸ் தொகுதியில் 32,876 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார்.

"நாங்கள் மக்களுக்கு முன்னுரிமைகளை வழங்க உறுதிபூண்டுள்ளோம், பிரெக்ஸிட் செய்து முடிப்பது அதில் ஒரு முன்னுரிமை. நாங்கள் முன்னேற விரும்புகிறோம், " என்று அவர் கூறினார்.

English summary
Indian-origin candidates across both the Conservative and Labour parties on Friday registered strong results in the UK's general election, with around a dozen MPs retaining their seats alongside some new faces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X