லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

லண்டன்: வங்கிகளில் கடன்பெற்றுவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று... பொருளாதார குற்றவாளி என்று முதல் நபராக அறிவிக்கப்பட்ட மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி விட்டார் என்பது மல்லையா மீதான குற்றச்சாட்டாகும். இதையடுத்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி சிபிஐ சார்பில் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது.

Uk home secretary approves extradition of fugitive economic offender vijay mallya

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த டிசம்பர் 9ம் தேதி, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக, அதற்கு மறுநாளான டிசம்பர் 10ம் தேதி இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு அந்த உத்தரவு அனுப்பி வைக்கப் பட்டது.

அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க 2 மாதங்கள் அவகாசமும் உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கெடு முடியும் கடைசி நாளில் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் உள்துறை அமைச்சக செயலர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டார்.

அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்திய, தலைமறைவு பொருளாதார மோசடியாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முதல் தொழிலதிபர் மல்லையா ஆவார்.

அந்த சட்டப்பிரிவின் கீழ், மல்லையாவை குற்றவாளி என அறிவித்து அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. அதன் மீதான விசாரணை பிப்ரவரி 5ம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

English summary
The UK Home Office has signed an order approving the extradition of fugitive liquor baron Vijay Mallya to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X