லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த தடை - பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கத் தடை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளின் போர் குற்றங்கள், உலக மக்கள் மீது ஏவும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் என அரசின் பல பாதுகாக்கப்பட்ட மற்றும் முக்கியமான ஆவணங்களைத் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார்.

கொடூரமான குவாண்டனமோ பே' சிறைச்சாலை முதல் ஈராக்கில் அமெரிக்காவின் போர் குற்றங்கள் வரை பல முக்கிய குற்றச்சாட்டுகளை இவர் ஆதாரங்களுடன் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

துரைமுருகனுக்கு வந்த துரைமுருகனுக்கு வந்த "திடீர்" காய்ச்சல்.. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.. தொண்டர்கள் கவலை..!

 உதவவில்லை

உதவவில்லை

அரசின் அதி முக்கிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டதற்காக இவர் மீத அமெரிக்காவில் பல கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டது. அசாஞ்சேவின் சொந்த நாடான ஆஸ்திரேலியா உள்ளிட எந்த நாடும் இவருக்கு உதவவில்லை.

 ஈகுவடாரில் தஞ்சம், லண்டனில் சிறை

ஈகுவடாரில் தஞ்சம், லண்டனில் சிறை

இதையடுத்து தென் அமெரிக்காவின் குட்டி தீவு நாடான ஈகுவடாரில் இவர் தஞ்சம் புகுந்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஈகுவடார் அரசு இவருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதன் பின் பிரிட்டன் காவல் துறை இவரைக் கைது செய்து, லண்டன் சிறையில் அடைத்தனர். ஜூலியன் அசாஞ்சே மீது தங்கள் நாட்டில் பல வழக்குகள் உள்ளதால், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கு தொடர்ந்தது.

 நாடு கடத்த தடை

நாடு கடத்த தடை

இந்த வழக்கை இன்று விசாரித்த மாவட்ட நீதிபதி வனேசா பாரிட்சர், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கத் தடை விதித்து தீர்ப்பளித்தார். அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்த உத்தரவிடுவது, மன ரீதியாக அவருக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது தீர்பில் குறிப்பிட்டார்.

ரீதியான

ரீதியான

மேலும், அமெரிக்காவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டால் வெளி உலகத்துடனான அவரது தொடர்புகள் குறைக்கப்படும், மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அவர் மீது விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றார். இது ஒருவருக்கு இருக்கும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்று கூறிய அவர், இது ஏற்கனவே அதிகளவில் தற்கொலை எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

 அமெரிக்கா மேல் முறையீடு

அமெரிக்கா மேல் முறையீடு

இருப்பினும், பிரிட்டன் மாவட்ட நீதிபதி அளித்துள்ள இந்த தீர்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது, மேலும், 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் விசாரணை செய்யப்படவுள்ளது.

English summary
UK judge rules WikiLeaks' Julian Assange should not be extradited to United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X