லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரிட்டனில் முதல் முறை.. ஒரே நாளில் கொரோனாவால் 500க்கும் மேற்பட்டோர் பலி

Google Oneindia Tamil News

லண்டன்: அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இன்று, பிரிட்டனில் 563 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவாகியுள்ளன. முதல் தடவையாக அந்த நாட்டில், ஒரு நாளைய, கொரோனா இறப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளது, மொத்த இறப்புகள் 2,352 என்ற அளவில் உள்ளது.

"மார்ச் 31 அன்று மாலை 5 மணி வரை இங்கிலாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளில், 2,352 பேர் இறந்துவிட்டனர்" என்று பிரிட்டன் சுகாதார அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

UK reports over 500 coronavirus deaths in single day

29,474 பேர் பிரிட்டனில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையைவிட 4,324 அதிகமாகும்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரிட்டன் கடந்த வாரம் லாக்டவுன் செய்யப்பட்டது. அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.

மும்பையின் தாராவி ஏரியாவில் கால் வைத்த கொரோனா.. கவலையளிக்கும் செய்தி.. ஏன் தெரியுமா? மும்பையின் தாராவி ஏரியாவில் கால் வைத்த கொரோனா.. கவலையளிக்கும் செய்தி.. ஏன் தெரியுமா?

இந்த வைரஸ் அரச குடும்பத்தினரையும் தாக்கியுள்ளது, இளவரசர் சார்லஸ், தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு, நேற்று வெளியே வந்தார்.

English summary
Britain reported 563 daily coronavirus deaths on Wednesday, the first time the national toll has exceeded 500, bringing the total fatalities to 2,352, according to official figures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X