இங்க மட்டும் இல்ல..எங்கே போனாலும் 90's கிட்ஸ்க்கு இதே பிரச்னை! வெறுத்து போன இளைஞர் செய்த வினோத செயல்
லண்டன்: ஊரே திரும்பிப் பார்க்கும் செயலை செய்ய வேண்டும் என்று பொதுவாகச் சொல்லுவார்களே, அதே இந்த இளைஞர் அடுத்த லெவலுக்கே எடுத்துச் சென்றுவிட்டார்.
உண்மையான காதலைக் கண்டுபிடிக்கவும் தங்கள் மனதுக்குப் பிடித்த நபர்களைத் திருமணம் செய்து கொள்ளவும் தான் இங்குள்ள அனைவரது விருப்பமும். இதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முயற்சி செய்வார்கள்.
80's கிட்ஸ் காதல் கோட்டை படத்தை போல ஒருவரையொருவர் பார்க்காமல் காதல் செய்தனர்., 20's கிட்ஸ் டின்டன்ர், குப்பிட் என அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டனர். இடையில் சிக்கிக் கொண்ட 90's கிட்ஸ் தான் பாவம் என்ன செய்வதென்றே தெரியாமல் முழிக்கிறார்கள்.
முகலாயர் கால இந்திய வரலாற்றுப் பொக்கிஷங்களை பல கோடிக்கு ஏலம் விடும் லண்டன் நிறுவனம்

90's கிட்ஸ்
90's கிட்ஸ்க்கும் திருமணத்திற்கும் எங்குச் சென்றாலும் இதேநிலை தான்! நம் நாட்டில் தான் 90's-க்கு திருமணம் என்பது அடைய முடியாத கனவாக இருந்து வருகிறது என்று நினைத்தால் உலகெங்கும் கூட இதே நிலைதான் உள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் முகமது மாலிக். 29 வயதாகும் இவர், அந்த ஊர் 90's கிட்ஸ். எனவே வழக்கம் போல அவரும் பேச்சுலர் தான். இந்த முகமது மாலிக் தான், லண்டன் நகரமே வியந்து பார்க்கக் கூடிய செயலை செய்துள்ளார்.

விநோதம்
லண்டன் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான பர்மிங்காமில் திருணத்திற்குப் பெண் தேடி பெரிய பேனரையே வைத்துள்ளார் இந்த லண்டன் 90's கிட். அந்த பேனரில் அரேன்ஜ்டு மேரேஜ்-இல் இருந்து தன்னை காப்பாற்றுங்கள் (Save me from an arranged marriage) எனக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லீம் இளைஞரான தனக்கு வாழ்க்கைத் துணையாக வரும் நபர் 20களில் உள்ள முஸ்லீம் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்க்கைத் துணை நம்பிக்கைக்குரியவராகவும் உண்மையான நபராகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

20 அடி கட்அவுட்
இதற்காக அவர் சின்ன கட்அவுட் எல்லாம் வைக்கவில்லை. நம்ம ஊர் ரசிகர் மன்றங்களையே ஓரம் கட்டும் வகையில் சுமார் 20 அடிக்கு கட் அவுட் வைத்து லண்டன்வாசிகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். லண்டனில் முக்கிய பகுதிகளில் கட்அவுட்களை வைக்கச் செலவு அதிகம். ஆனாலும், தனது வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ள இவர். ஜன.12 வரை இந்த கட்அவுட்டிற்கான பணத்தை முன்கூட்டியே செலுத்திவிட்டார்.

என்ன சொல்கிறார்
இது குறித்து பிபிசி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "நான் 5.8 அடி உயரம் கொண்ட ஃபிட்டான ஒரு இளைஞர். நான் கிரியேடிவ் நபர். சில சமயங்களில் கிறுக்கு செயல்களையும் செய்வேன். அதுபோன்ற ஒன்று தான் இது. எனக்கு எந்த நாட்டை சேர்ந்தவரும் வாழ்க்கை துணையாகக் கிடைத்தாலும் ஓகே தான். ஆனால், பஞ்சாபி குடும்பத்தைத் தேர்ந்த ஒருவர் கிடைத்தால் இன்னும் சிறப்பு. ஏற்கனவே பலரும் தங்கள் தகவல்களை எனக்கு அனுப்பி வருகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய இணையதளம்
இதை அவர் எதோ விளையாட்டு போக்கில் செய்யவில்லை. சீரியஸாகவே தனது வாழ்க்கை துணையை இப்படித் தேர்ந்தெடுக்க முடியும் என அவர் நம்புகிறார். அதனால் தான் இதற்காக அவர் தனியாக ஒரு இணையதளத்தையே தொடங்கிவிட்டார். Findmalikawife என்ற அந்த இணையதளத்தில் என்ன வேலை செய்கிறார், சம்பளம் உள்ளிட்ட இதர தகவல்களைத் தெரிவித்துள்ளார். தனக்குப் பிடித்தவர்கள் அந்த இணையதளத்தில் தகவல்களைத் தெரிவிக்கலாம் என்றும் பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

அலைந்து திரியும் 90's கிட்ஸ்
வாழ்க்கைத் துணையைத் தேடிய பிரிட்டன் 90's கிட்ஸ் இதுபோன்ற கட்அவுட்களை வைப்பது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மான்செஸ்டர் பகுதியில் தனக்கு டேட்டிங் செய்ய பெண் வேண்டும் என மார்க் என்ற 90's இதேபோல பில்போர்ட் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கே கடுமையாக போராடும் 90's கிட்ஸ்க்கு இந்த முறையிலாவது திருமணம் நடக்குமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். இருந்தாலும் இந்தியாவில் இருந்து 90's கிட்ஸ் சார்பில் நாமும் அவருக்கு வாழ்த்துவோம்!