India
  • search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“நல்ல திறமைசாலி.. சூப்பரா வேலை பார்ப்பார்”.. கணவரை வாடகைக்கு விட்ட புத்திசாலி மனைவி!

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குடும்ப வருமானத்திற்காக கணவரை வைத்து வித்தியாசமாக வாடகைக்கு விடும் தொழில் ஒன்றை நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குழப்பமாக இருக்கிறதா.. முழுச் செய்தியையும் படியுங்கள்.. புரியும்.

மக்களின் தேவைகளையே மூலதனமாகக் கொண்டு தினமும், புதுப்புது ஸ்டார்ட் அப்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. நிஜமாகவே அவை மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், அதன்மூலம் அதிக வருமானத்தையும் அவர்கள் பெறுகின்றனர். சிலர் ஆரம்பித்துள்ள தொழில்கள் இப்படிக்கூட செய்ய முடியுமா? என நாம் யோசிக்க முடியாத கோணத்தில்கூட இருக்கும்.

2 நாட்களுக்கு கனமழை..7மாவட்ட மக்களுக்கும் குடை அவசியம் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம் 2 நாட்களுக்கு கனமழை..7மாவட்ட மக்களுக்கும் குடை அவசியம் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

இங்கிலாந்தைச் சேர்ந்த லாரா யங் என்ற பெண்மணியும் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான். மற்றவர்களில் இருந்து வேறுபட்டு, வித்தியாசமாகச் சிந்தித்து, தன் கணவரின் திறமையை வைத்து வருமானம் பார்த்து வருகிறார் இவர்.

கைவினைக் கலைஞர்

கைவினைக் கலைஞர்

லாரா யங்கின் கணவர் ஜேம்ஸ் பழைய பொருட்களைக் கொண்டு புதிய பொருட்களை கலைநயத்துடன் உருவாக்குவதில் நிபுணர் ஆவார். வீட்டில் ஓய்வாக இருக்கும்போது கூட, உடைந்த, தேவையில்லாத என வெளியில் தூக்கி எறிய வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு, பல கைவினைப் பொருட்களை இவர் உருவாக்கியுள்ளார். உதாரணத்திற்கு சமீபத்தில் அவர் வீட்டில் கையில் கிடைத்த பழைய பொருட்களை வைத்து அழகிய சாப்பாட்டு மேஜை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

அதோடு, எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஜேம்ஸ், வீட்டை அலங்காரம் செய்வது, தூய்மையாக வைத்துக் கொள்வது, தோட்டத்தைப் பராமரிப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளார். கணவரின் இந்தத் திறமைகளால் கவரப்பட்ட லாரா, இதை வைத்து எப்படி வருமானம் வரச் செய்யலாம் என யோசித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அந்த வித்தியாசமான யோசனை உதித்துள்ளது.

கணவர் வாடகைக்கு...

கணவர் வாடகைக்கு...

அதன்படி எனது கைதேர்ந்த கணவர் விற்பனைக்கு எனப் பொருள்படும் வகையில், 'Rent My Handy Husband' என ஒரு இணையதளத்தை தொடங்கினார். இந்த இணையதளம் மூலமாக தனது கணவரை மற்ற வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். வீட்டு வேலை என்றதும் ஏதோ பாத்திரம் கழுவ, துணி துவைக்க என நினைக்க வேண்டாம். யூடியூப் வீடியோக்களில் பார்ப்போமே, வீட்டில் உள்ள பழைய பொருட்களை வைத்து புதிய பொருட்களைச் செய்வது, அது போன்ற வேலைக்குத்தான்.

பகுதி நேர வேலை

பகுதி நேர வேலை

இணையதளம் மூலம் தொடர்பு கொள்பவர்களின் தேவைக்கு ஏற்ப, அலமாரி செய்து தருவது, சுவரில் ஆணி அடிப்பது, பெயிண்ட் அடிப்பது என சின்ன சின்ன ப்ராஜெக்ட்களாக எடுத்து ஜேம்ஸ் செய்து வருகிறார். பகுதி நேரமாக இந்த வேலையைச் செய்வதால், அவரால் மனைவிக்கு உதவியாக குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள முடிகிறது. வருமானத்திற்கு வருமானமும் கிடைத்து விடுகிறது.

ராஜினாமா

ராஜினாமா

முன்னதாக கிடங்கு ஒன்றில் இரவு நேர ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார் ஜேம்ஸ். பின்னர் தனது மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டதால், தன் மனைவிக்கு உதவுவதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வேலையை அவர் ராஜினாமா செய்து விட்டார். அப்போது கிடைத்த நேரத்தில்தான் இதுபோன்ற கைவினைப் பொருட்கள் செய்ய ஜேம்ஸ் செலவிட்டுள்ளார்.

வித்தியாசமான யோசனை

வித்தியாசமான யோசனை


வேலையை ராஜினாமா செய்து விட்டதால், வீட்டுச் செலவிற்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அப்போது தான் லாரா இப்படி வித்தியாசமாகச் சிந்தித்து, புதிய தொழிலைத் தொடங்கியுள்ளார். லாரா தனது கணவரை பணிக்கு அனுப்ப பணிக்குத் தகுந்தவாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 35 பவுண்டுகள் கட்டணம் நிர்ணயித்துள்ளதாக அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.3,365 ஆகும்.

குறைவான கட்டணம்

குறைவான கட்டணம்

ஆனால் அனைவருக்கும் இந்த கட்டணம் பொதுவானதில்லை. இது போன்ற வேலைகளை பணம் கொடுத்து செய்வதற்கு வசதியில்லாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் அவர்கள் கேட்கும் வேலையை ஜேம்ஸ் செய்து தருவார் எனவும் லாரா அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

English summary
A UK woman has started her own 'Hire my handy hubby' service as her husband loves DIY jobs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X