லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்திய வருகையை ரத்து செய்தார் போரிஸ் ஜான்சன்.. இங்கிலாந்தில் கொரோனா பரவுவதால் திடீர் முடிவு

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினத்தின்போது வெளிநாட்டு முக்கிய பிரமுகர் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பது வழக்கம். கடந்த வருடம் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோன்ராவ் பங்கேற்றார்.

United Kingdom PM Boris Johnson cancels visit to India

இந்த நிலையில், 2021ம் ஆண்டு குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க போரிஸ் ஜான்சன் அழைக்கப்பட்டார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, சப்ளையில் இணைந்து செயல்படுவோம்.. சீரம், பாரத் பயோடெக் கூட்டாக அறிவிப்புகொரோனா தடுப்பூசி தயாரிப்பு, சப்ளையில் இணைந்து செயல்படுவோம்.. சீரம், பாரத் பயோடெக் கூட்டாக அறிவிப்பு

இந்த நிலையில், இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நேற்று முதல் மீண்டும் இங்கிலாந்தில் லாக்டவுன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பரவல்தான் இந்த நிலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள். எனவே நிலைமையை அங்கேயே இருந்து கண்காணிக்க வேண்டியது முக்கியம் என்பதால், இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் இன்று காலை பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார். திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் அவர் இந்தியாவுக்கு வர முடியாது என்று அப்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

English summary
United Kingdom PM Boris Johnson cancels visit to India later this month, due to corona spread.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X