லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புற ஊதா கதிர்கள் vs கொரோனா வைரஸ்.. அமெரிக்கா, இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கே நல்ல செய்தி

Google Oneindia Tamil News

லண்டன்: ஐஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அமெரிக்காவில் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் எப்படி பரவியது மற்றும் எப்போது குறையும் என்பதற்கான விடை தெரியவரும். இந்தியாவுக்கும் இந்த ஆய்வுகள் நல்ல செய்தியை விரைவில் தரலாம்.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    கொரோனா வைரஸ் (SARS-CoV-2) பரவுவதில் வெப்பம், ஈரப்பதம் மற்றும் மக்கள்தொகை அடர்த்தி ஆகியவற்றுக்கு உள்ள தொடர்புகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் வெப்பமான வானிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவுது சரியும் என்ற கோட்பாட்டிற்கு வழிவகுத்துள்ளது. ஆனாலும் கோவிட் 19 என்ற இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து பல்வேறு விதமாக கருத்துக்கள் விஞ்ஞானிகளிடம் உள்ளன.

    கோவிட் 19 பரவும் விஷயத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைக் காட்டிலும் சூரியனின் புற ஊதா கதிர்கள் பெரிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று இப்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவில் விரைவில் கோடைக்காலம் நெருங்க உள்ள நிலையில் நல்ல தகல்களை தரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு

    ஆஸ்திரேலியாவில் குறைவு

    ஆஸ்திரேலியாவில் குறைவு

    குறிப்பாக, ஐஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் தனிநபர் விகிதங்களை பார்த்தால், உலகெங்கிலும் COVID-19 பரவுவதில் சூரியனின் புறஊதா கதிர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கலாம் என்று தெரியவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகிலேயே அதிமான கொரானா வைரஸ் பரவல் வழக்குளை பார்த்தால் ஐஸ்லாந்தில் 0.177 சதவீதமாக உள்ளது, 364,260 மக்கள்தொகை உள்ள அந்த நாட்டில் இதுவரை 648 பேருக்கு பாதிப்பு உள்ளன. ஆஸ்திரேலியாவின் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று விகிதம் வெறும் 0.0083 சதவிகிதம் ஆகும். 25.4 மில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 2,044 பேருக்குதான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    புறஊதா கதிர்கள் பங்கு

    புறஊதா கதிர்கள் பங்கு

    அதாவது ஐஸ்லாந்தின் நோய்த்தொற்று விகிதம் ஆஸ்திரேலியாவை விட 22 மடங்கு அதிகமாகும், இரு நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு வெப்பமும் ஈரப்பதமும் ஏற்றத்தாழ்வில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்றாலும், புற ஊதா கதிர்களின் தாக்கத்தைப் பார்த்தால், வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகிய வானிலை காரணிகளைக் காட்டிலும் கணிசமான அளவு அதிகமாக இருக்கிறது.

    குளிர் காலம்

    குளிர் காலம்

    ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சராசரி வெப்பநிலை ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 15 வரை 74.8 டிகிரி பாரன்ஹீட்டாக அதாவது (23.7 டிகிரி செல்சியஸ்) இருந்தது, அதாவது தெற்கு அரைக்கோளத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் கோடைகாலமாக இருந்தது. அதே நேரத்தில் ஐஸ்லாந்தின் தலைநகராக ரெய்காவிக் நகரில் இது 32.1 டிகிரி பாரன்ஹீட்டாக ஆக இருந்தது, எனவே இது வடக்கு அரைக்கோளத்தில் உள்ள ஐஸ்லாந்தில் குளிர்காலமாக இருந்தது.

    வெப்ப நிலை

    வெப்ப நிலை

    இன்னொரு ஒரு நெருக்கமான ஒப்பீடாக அமெரிக்காவின் சிகாகோ நகரத்தையும் ஐஸ்லாந்தையும் இப்போது பார்க்கலாம். ஏறத்தாழ ஐஸ்லாந்தின் சராசரி வெப்பநிலையும் சிகாகோவின் வெப்ப நிலையும் ஒரே மாதிரி தான் இருக்கும் (32.6 எஃப்). ஆனால் சிகாகோவின் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவாக இருந்தன. ஐஸ்லாந்தின விகிதம் சிகாகோவின் விகிதத்தை விட 10 மடங்கு அதிகமாக உயர்ந்தது (0.0178 சதவீதம்,). 2.74 மில்லியன் மக்கள் உள்ள சிகாகோவில் 490 வழக்குகளே உள்ளன.

    வைரஸ்களை அழிக்கும் சூரியன்

    வைரஸ்களை அழிக்கும் சூரியன்

    வைரஸ்களை அழிப்பதில் சூரிய ஒளி வகிக்கும் பங்கு குறித்து ஏற்கனவே ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் நோயியல் பேராசிரியர் ஜான் நிக்கோல்ஸ் குறிப்பிட்டுள்ளார், அவர் கோவிட் 19 வைரஸ் குறித்து ஆராய ஆய்வகத்தில் வளரக்கப்பட்டு வரும் SARS-CoV-2 வைரஸ் நகலை தனது குழு ஆராய்ந்து வருகிறது என்றார். இந்த வாரம் வெப்ப நிலையை ஆராய்ந்த போது காய்ச்சல் போன்ற பிற வைரஸ்களை வெப்ப நிலை பாதிக்கிறது . எனவே COVID-19 வைரஸை சூரிய ஒளி பாதிக்கிறதா என்பதை தனது குழு விசாரித்து வருவதாக அவர் கூறினார்.

    முக்கியமான ஆராயச்சி

    முக்கியமான ஆராயச்சி

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட பல ஆய்வுகளில் சூரிய ஒளியால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸை செயலிழக்கச் செய்யலாம் என்பதைக் காட்டுகின்றன, சூரிய ஒளியால் SARS-CoV-2 ஐ இதேபோல் செயலிழக்கச் செய்ய முடியுமா என்று சோதனை அமைப்பை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்," என்று நிக்கோல்ஸ் அக்யூவெதரிடம் கூறினார்.

    புற ஊதா கதிர்கள்

    புற ஊதா கதிர்கள்

    ஐஸ்லாந்து வடக்கே இருப்பதால் - அதன் அட்சரேகை 64.1 மற்றும் அதன் பிரதான நிலப்பகுதி ஆர்க்டிக் வட்டத்திற்கு தெற்கே சில டிகிரி மட்டுமே உள்ளது. எனவே அந்த நாடு சில மணிநேரமே சூரியனையும் சூரிய ஒளியையும் பெறுகிறது. சிகாகோவுடன் ஒப்பிடும்போது ஐஸ்லாந்தின் சூரிய பற்றாக்குறையை அதிகம் ஆகும். குளிர்காலத்தில் ஐஸ்லாந்து கிட்டத்தட்ட புற ஊதா கதிர்வீச்சைப் பெறாது. எனவே ஐஸ்லாந்திற்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், வசந்த காலம் கோடையில் தொடர்ந்தால் அது தொடர்ந்து அதிக புற ஊதா கதிர்களை அனுபவிக்கும், எனவே கொரோனா வைரஸ் பரவும் எண்ணிக்கையையும் பாதிக்கக்கூடும். ஏனெனில் ஐஸ்லாத்தில் இப்போது அதிகபட்ச வெப்ப நிலையே 2.5 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. வரும் ஜுன் 20க்கு பிறகு கோடை காலம் ஆரம்பிக்கும் போது வெப்ப நிலை அதிகரிக்கும். எனவே அங்கு கொரோனா பாதிப்பு குறையலாம் என்றார்.

    கோடை காலம்

    கோடை காலம்

    இந்த விஞ்ஞானிகள் சொல்வதை பார்த்தால் இந்தியாவில் கோடையில் வெயில் மண்டையை பிளக்கும். புறஊதா கதிர்களின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கும். எனவே தான் குறைவாக உள்ளதா என்ற கேள்விகள் எழுகிறது. அத்துடன் சித்திரை வரும் போதெல்லாம் கொரோனா வைரஸ் வெயில் காரணமாக குறையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் சித்திரை வைகாசி ஆகிய இருமாதங்கள் இந்தியாவில் வெயில் மிக அதிகமாக இருக்கும். வெளிநாட்டு ஆய்வுகள் எல்லாம் சொல்வதை பார்த்தால் இந்தியாவில் கொரோனா வரும் நாட்களில் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. எனினும் தற்போது அறியாமையால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. எனவே இதை தடுக்க நாம் இந்த ஊரடங்கை பின்பற்றி கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடித்தே ஆகவேண்டும். அப்போது தான் நமக்கு நல்ல பலன் சித்திரையில் கிடைக்கும்.

    English summary
    UV’s possible impact on the spread of COVID-19 around the world , What infection rates in Iceland and Australia may reveal about how COVID-19 could spread in usa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X