அம்மாடி! வயாகரா கொடுத்தே இளம்பெண்ணை காப்பாற்றிய மருத்துவர்.. வயாகரா 'அது'க்கு மட்டும் இல்லையாம்
லண்டன்: பிரிட்டன் நாட்டில் மருத்துவர் ஒருவர் இளம் பெண்ணை வயாகரா கொடுத்தே காப்பாற்றிய விநோத சம்பவம் நடந்துள்ளது. இது எப்படி என்றும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர்.
மருத்துவ உலகில் சில சமயங்களில் யாரும் எதிர்பார்க்காத அதிசயங்கள் நடக்கும். மோசமாகப் படுகாயம் அடைந்த நபர் உயிர் பிழைப்பார். ஆனால். சிறுகாயம் அடைந்த நபர் உயிரிழப்பார்.
அப்படியொரு சுவாரஸ்யமான சம்பவம் தான் இப்போது பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. சுமார் 28 நாட்களாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமாகத் தொடங்கியுள்ளது, அப்போது மருத்துவர் ஒருவர் இளம் பெண்ணை வயாகரா கொடுத்தே காப்பாற்றிய விநோத சம்பவம் நடந்துள்ளது
ஓமிக்ரானை விட அதிக உருமாற்றம்.. உருவானது வலிமையான புது வேரியண்ட்.. பீதி கிளப்பும் IHU Coronavirus!

கொரோனா வைரஸ்
கடந்த 2 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலக நாடுகளை கொரோனா வைரஸ் தான் ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனா வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக உலக நாடுகளில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு ஓமிக்ரான் கொரோனாவால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பிரிட்டன் உட்பட உலகின் பல பகுதிகளிலும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இங்கிலாந்து செவிலியர்
இங்கிலாந்தில் உள்ள லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயது பெண் மோனிகா அல்மெய்டா. இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 9ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அவருக்கு ஐசியு பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதும் உடல்நிலை மோசமாகவே இருந்ததால் மருத்துவர்கள் அவரை induced coma நிலைக்குக் கொண்டு சென்றனர்.

வயாகரா மாத்திரை
இதையடுத்து அவருக்கு பல்வேறு முறைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவரது உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்ததால், அவரது குடும்பத்தினர் கவலை கொண்டனர். அப்போது தான் அங்கிருந்த மருத்துவர்கள் சோதனை சிகிச்சை முறையில் மோனிகா அல்மெய்டாவுக்கு மிக அதிக டோஸ் வயாகரா மாத்திரையை அளித்துள்ளனர். இந்த சிகிச்சையாவது பலன் அளிக்க வேண்டும் என்றே மருத்துவர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

எப்படி நடந்தது
அப்போது சுமார் 28 நாட்களுக்குப் பிறகு, திடீரென அந்த செவிலியர் கோமாவில் இருந்து கண் விழித்துள்ளார். தான் எப்படி உயிர் பிழைத்தேன் என செவிலியர் கேட்ட போதுதான், அவருக்குச் சோதனை முறையில் வயாகரா மாத்திரைகள் அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வயகரா மாத்திரைகள் ரத்த நாளங்களைத் தளர்வு அடையச் செய்து, அனைத்துப் பகுதிகளுக்கும் அதிக ரத்தம் பாய அனுமதிக்கிறது. இதன் மூலமே அந்த செவிலியர் கோமாவில் இருந்து மீண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிர ஆய்வு
இதேபோலத் தான் கடந்த அக்டோபர் மாதம் செவிலியர் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவர் வேக்சின் எடுத்துக் கொண்டிருந்த போதிலும் அவருக்குத் தீவிர பாதிப்பு ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. அவருக்கும் இதேபோல வயாகராவை கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டது. உலகெங்கும் வயாகரா மூலம் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியுமா என்ற ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது மட்டும் வெற்றிகரமாக முடிந்தால், வரும் காலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வயாகரா மாத்திரைகளை அளித்து சிகிச்சை அளிக்கலாம்.