• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ச்சீ! நாடாளுமன்றத்தில் பிரிட்டன் எம்பி செய்த செயல்.. அதுவும் இரண்டு முறை! வெலவெலத்து போன பெண் எம்பி

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் மிகப் பழைய ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரிட்டன் நாட்டில் கன்சர்வேடிவ் கட்சியின் எம்பி செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்று பிரிட்டன். இப்போது பிரிட்டன் நாட்டில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், அக்கட்சியின் போரிஸ் ஜான்சன் பிரிட்டன் பிரதமராக உள்ளார்.

இதற்கிடையே ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்பி நீல் பாரிஷ் நாடாளுமன்றத்தில் அனைவரும் முகம் சுழிக்கும்படி செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முள்ளை முள்ளால் எடுங்க! இந்துக்களே வன்முறையாளர்களை கல், செங்கல்லால் தாக்குங்க! பாஜக எம்பி சர்ச்சை முள்ளை முள்ளால் எடுங்க! இந்துக்களே வன்முறையாளர்களை கல், செங்கல்லால் தாக்குங்க! பாஜக எம்பி சர்ச்சை

 நீல் பாரிஷ்

நீல் பாரிஷ்

கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த எம்பி நீல் பாரிஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் தரநிலை ஆணையரிடம் சென்று தன்னைப் பற்றியே புகார் அளித்துக் கொண்டுள்ளார். அதாவது நாடாளுமன்ற அவையில் வைத்தே இரு முறை தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்தாக நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து கன்சர்வேடிவ் கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்,

ராஜினாமா

ராஜினாமா

விசாரணை நடைபெற்றாலும் கூடத் தான் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வேன் என்று நீல் பரிஷ் முன்பு கூறி இருந்தார். இந்தச் சூழலில் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நீல் பரிஷ், "இறுதியில் இப்போது நான் என் குடும்பத்திற்கும் எனது தொகுதிக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளேன். எனவே, நான் இதன் பின்னரும் இந்த பதவியில் நீடிக்கத் தகுதியான நபர் இல்லை.

 முதல் சம்பவம்

முதல் சம்பவம்

எனவே, நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். முதன்முதலில் இது எதிர்பாராத விதமாகவே நடந்தது. டிராக்டர் தொடர்பாக நான் இணையத்தில் தேடினான். அப்போது அதே பெயரை ஒட்டி இருக்கும் ஆபாச தளத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அப்போது தான், அதைச் சிறிது நேரம் நான் பார்த்தேன். இதை நான் செய்து இருக்கக் கூடாது. நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் எனத் தெரியவில்லை.

 இரண்டாம் சம்பவம்

இரண்டாம் சம்பவம்

ஆனால், இதை விட நான் செய்த மிகப் பெரிய குற்றம்.. மற்றொரு சந்தர்ப்பத்தில் இரண்டாவது முறையாக இதை நான் செய்தது. அப்போது நான் வேண்டுமென்றே தான் அந்த தளத்திற்குச் சென்றேன். சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் போது, அதை நான் செய்தேன். அது ஒரு பைத்தியக்காரத்தனமான தருணம். அதை நான் செய்து இருக்கக் கூடாது. நான் செய்ததை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். நான் செய்ததைச் சரி என நியாயப்படுத்தவும் நான் விரும்பவில்லை. நான் செய்தது தவறு தான்" என்று கூறினார்.

 பெண் எம்பி

பெண் எம்பி

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர், காமன்ஸ் சேம்பரில் ஆண் எம்பி ஒருவர் தனது அருகில் அமர்ந்து ஆபாசப் படங்களைப் பார்த்ததாகவும் குழு விவாதம் சமயத்திலும் கூட அதே எம்பி ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தான் பார்த்ததாகக் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இந்த விவகாரம் வெளி உலகத்திற்குத் தெரிய வர இதுவே காரணமாக அமைந்தது.

 மனைவி

மனைவி

நீல் பாரிஷ் ராஜினாமா செய்யும் முன்பு, நேர்காணல் ஒன்றில் பேசிய அவரது மனைவி, "எனது கணவர் இதற்கு முன்பு இதுபோன்ற செயல்களைச் செய்தது இல்லை. எனது கணவர் மிகவும் பாசமான நபர். அவர் இப்படிச் செய்ததை நம்ப முடியவில்லை. இது மிகவும் சங்கடமாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

English summary
British lawmaker resigned after admitting he twice viewed pornography on his phone: (நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்த பிரிட்டன் எம்பி) British MP latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X