லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.. ஈரானுக்கு ஐரோப்பா திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

ஈரானுடன் செய்யப்பட்டு இருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்க படைகள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

    லண்டன்: ஈரானுடன் செய்யப்பட்டு இருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று ஐரோப்பா யூனியன் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் இந்த முடிவு அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    கடந்த வாரம் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

    இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை வலுத்துள்ளது. இந்த சண்டை கண்டிப்பாக மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தலால் ஏற்பட்ட சண்டை.. காங். கூட்டத்தை புறக்கணித்த திமுக.. ஸ்டாலின் அதிரடி முடிவு!உள்ளாட்சி தேர்தலால் ஏற்பட்ட சண்டை.. காங். கூட்டத்தை புறக்கணித்த திமுக.. ஸ்டாலின் அதிரடி முடிவு!

    அமெரிக்கா திட்டம்

    அமெரிக்கா திட்டம்

    இதனால் அமெரிக்கா, ஈரானை தனிமைப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது. ஈரான் உடன் அமெரிக்கா செய்திருந்த 2015 அணு ஆயுத ஒப்பந்தத்தை கடந்த 2018ம் வருடம் டிரம்ப் நீக்கினார். அதன்பின் ஈரான் மீது இரண்டிற்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்தார். அதன்பின்தான் அமெரிக்கா சுலைமானியை கொன்றது.

    ஐரோப்பா யூனியன்

    ஐரோப்பா யூனியன்

    இதேபோல் ஐரோப்ப யூனியனில் இருக்கும் நாடுகள், ஜெர்மன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் செயல்பட வேண்டும். ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ஈரான் உடன் செய்திருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை வைத்தார்.

    ஆனால என்ன

    ஆனால என்ன

    ஆனால் ஈரான் உடன் செய்திருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை நீக்க ஐரோப்ப யூனியன் மறுத்துவிட்டது. இது தொடர்பாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மார்க்கெல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    முடியாது

    முடியாது

    அதில், நாட்டில் அமைதியை கடைபிடிக்க வேண்டும். அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதை தவிர்க்க வேண்டும். அணு ஆயுத ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும். மத்திய கிழக்கு நாட்டில், அதிருப்தி உண்டாவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    தடை செய்யாது

    தடை செய்யாது

    ஈரான் உடன் செய்யப்பட்டு இருக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஐரோப்பா தடை செய்யாது. ஈரானுக்கு இன்னும் வாய்ப்பு கொடுக்க நாங்கள் விரும்புகிறோம். ஈரான் நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் அவர்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஐரோப்பா கூறியுள்ளது.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    இதனால் அமெரிக்கா தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளது. தங்கள் சொல்படிதான் ஐரோப்பா நடக்கும் என்று அமெரிக்கா இத்தனை நாள் நினைத்து வந்தது. ஆனால் டிரம்ப் பேச்சை மீறி ஈரான் செயல்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு இது தலைவலியாக முடிந்துள்ளது.

    English summary
    We will stand with Iran nuclear deal, for now, says European Union against the USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X