லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காதலின் சக்தி.. மனைவியை தாழ்வாக நடத்தினார்கள்.. ராஜ குடும்பத்தையே தூக்கி எறிந்த இளவரசர் ஹாரி!

பிரிட்டன் ராஜ குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மார்கல் இருவரும் வெளியேறுவதாக அறிவித்ததற்கு பின் நிறைய காரணங்கள், பரபரப்பு பின்னணிகள் உள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் ராஜ குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மார்கல் இருவரும் வெளியேறுவதாக அறிவித்ததற்கு பின் நிறைய காரணங்கள், பரபரப்பு பின்னணிகள் உள்ளது.

கண்டதும் காதல் இதுதான் இங்கிலாந்தின் ராஜா ஆவதற்காக 6வது நபராக வரிசையில் இருக்கும் இளவரசர் ஹாரியின் கதை. இந்த காதல் கதைதான் மொத்தமாக பிரிட்டன் ராஜ குடும்பத்தையே புரட்டிப்போட்டு இருக்கிறது. ராஜ குடும்பத்தை சேர்ந்த ஹாரி, கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் மேகன் மார்கலை சந்தித்தார்.

மேகன் மார்க்கெல் அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை, பெண்ணியவாதி, சமூக சேவகி. இருவருக்கும் கண்டதும் காதல். அந்த நாளே தங்கள் காதலை உணர்ந்து கொண்ட இவர்கள் டேட்டிங் செய்ய தொடங்கினார்கள். மேகன் மார்க்கெல் வரலாறு, பின்னணி எதையும் பற்றி யோசிக்காமல் ஹாரி அவரை நிபந்தனையின்றி காதலித்தார்.

என்ன சுற்றினார்கள்

என்ன சுற்றினார்கள்

அதன்பின் நாடு நாடாக சுற்றியவர்கள் 2017ல் காதலை அறிவித்துக் கொண்டார்கள். அதன்பின் அதை பொதுவில் அறிவித்தார்கள் . ஆனால் அப்போதுதான் இவர்களின் பிரச்சனை தொடங்கியது. ஹாரிக்கு சிறு வயதில் இருந்தே மனதுக்குள் புரட்சி எண்ணங்கள் ஓடியது. ராஜ குடும்பத்தின் பாரம்பரியங்களை அவர் முற்றிலுமாக எதிர்த்தார். அவரின் காதலும் ராஜ வம்சத்து பெண்ணுடன் நடக்கவில்லை .

செம

செம

ஏற்றத்தாழ்வு எதுவும் பார்க்காமல் இவர்கள் காதலித்தனர். ராஜ வம்ச பாரம்பரியங்களை மொத்தமாக துறந்து இவர்கள் திருமணமும் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தை பிரிட்டன் ராஜ குடும்பம் அவ்வளவாக விரும்பவில்லை. நம்ம குலம் என்ன? அவங்க குலம் என்ன? என்று பழைய தமிழ்ப்பட ஆணவ கொலை குடும்பம் போலத்தான் மேகனை அவர்கள் நடத்தினார்கள்.

என்ன திருமணம்

என்ன திருமணம்

திருமணம் செய்த பின், ஹாரி மேகன் இருவரும் தனியாக வீடு எடுத்து பிரிட்டனில் வசித்தனர். அதேபோல் நார்த் அமெரிக்கா, கனடாவிலும் அடிக்கடி சென்று வசித்தனர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ராஜ குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது. ஹாரியின் புரட்சிகரமான கருத்துக்களோ, மேகனின் பரந்து விரிந்த தாழ்மையான குணமோ அவர்களுக்கு பிடிக்கவில்லை.

என்ன அவமானம்

என்ன அவமானம்

மேகனை ஹாரியின் ராஜ குடும்பம் பல முறை அசிங்கப்படுத்தி இருக்கிறது. பொது விழாக்களில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தவறாக பேசி உள்ளனர். மற்ற ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் பலமுறை மேகனை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். தொலைக்காட்சி பேட்டிகளில் மேகனை குறித்து தவறாக பேசி உள்ளனர்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதற்கு நிறைய காரணம் இருக்கிறது.

மேகன் சினிமா நடிகை, மேகனுக்கு ஹாரிக்கு முன்பே வேறு ஒரு கணவர் இருந்து விவாகரத்து செய்துவிட்டார். மேகன் அமெரிக்கா பெண். மேகன் வெள்ளைக்காரி கிடையாது. இதுதான் மேகனை அந்த குடும்பம் தாழ்வாக நடத்த காரணம்.

வேறு என்ன

வேறு என்ன

அதேபோல் மேகன் கர்ப்பமாக இருந்த நேரத்தில் மீடியா அவரை அணுகிய விதம் அவருக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்தது. இங்கிலாந்து ராணி டயானாவை மீடியா துரத்தியது போலத்தான் இவரையும் துரத்தியது. இது ஹாரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் ஹாரி வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் மீடியாவை திட்டி போஸ்ட் போட்டு இருந்தார். எனக்கு உங்களால் மனஉளைச்சல் வந்துவிட்டது. என் மனைவியை தனியாக இருக்க விடுங்கள் என்று வெளிப்படையாக குறிப்பிட்டார்.

 இன்னொரு காரணம்

இன்னொரு காரணம்

அதேபோல் ராஜ குடும்பத்திற்கு இருக்கும் செல்வாக்கு, ஆண்ட பரம்பரை எண்ணம், அதீத பணம் , சுதந்திரம், திமிர், ஆணவம் அனைத்தையும் இவர் அப்படியே தூக்கி எறிந்துவிட நினைத்தார். இதில் எதிலும் ஹாரிக்கு நாட்டம் இல்லை. எங்காவது மலையாள ஹிட் சார்லி பட சார்லி டெஸா போல தூர தேசம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். இதோ இப்போது முடித்துவிட்டனர்.

என்ன அறிவிப்பு

என்ன அறிவிப்பு

ஆம், பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்கள் வட அமெரிக்கா சென்று அங்கு வாழ முடிவு செய்துள்ளனர். லண்டனில் கொஞ்ச நாட்கள் மட்டும் இருக்க போகிறார்கள். அதேபோல் இவர்கள் சொந்தமாக வேலை பார்த்து உழைக்க உள்ளனர்.

பணம் வேண்டாம்

பணம் வேண்டாம்

பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர். பிரிட்டன் அரசுக்கும், ராணிக்கும் ஏதாவது உதவி தேவைப்பட்டால் செய்வோம். ஆனால் அரசுடன் நெருக்கம் காட்ட மாட்டோம். பல நாட்களாக இதை யோசித்தோம்.

செம முடிவு

செம முடிவு

நிறைய விவாதித்து இந்த முடிவை அறிவித்து இருக்கிறோம். எங்கள் மனசு ஆட்சி செய்வதில் விருப்பம் கொள்ளவில்லை. கொஞ்சம் மக்களுக்காக நேரடியாக பணியாற்றும் எண்ணமும் எங்களுக்கு இருக்கிறது. புது வருடத்தில் மிக முக்கியமான முடிவை எடுத்து இருக்கிறோம், என்று ஹாரி குறிப்பிட்டுள்ளார். அவர்களின் இந்த முடிவு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எப்படி சொத்து

எப்படி சொத்து

இவர்கள் சுயமாக வேலை பார்த்து சொத்து சேகரிக்க போகிறார்கள். அதே சமயம் மேகனிடம் சினிமா நடிகையாக சம்பாதித்த பணம் கொஞ்சம் இருக்கிறது. இதை வைத்து இனி சுயமாக உழைத்து இவர்கள் வாழ முடிவு செய்துள்ளனர்.ஹாரிக்கும் கொஞ்சம் சொத்து இருக்கிறது. இதை அவர்கள் இன்ஸ்டாகிராமில் போகிற போக்கில் அறிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவு ராஜ குடும்பத்திக்கே இன்ஸ்டாகிராம் பார்த்துதான் தெரியும்.

காதல்தான்

காதல்தான்

2016ல் தொடங்கிய காதல் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடர் போல இவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டது. 2016ல் தனது காதலிக்க தனது ராஜ வம்ச பாரம்பரியங்களை தூக்கி எறிந்த அதே ஹாரிதான் தற்போது 2020ல் தனது மனைவிக்கு ஒன்று என்றவுடன் மொத்தமாக ராஜ வம்சத்தை விட்டே வெளியேற முடிவு செய்துள்ளார்.. காதல்தான் எத்தனை சக்தி வாய்ந்தது.

English summary
What a Love can do?: The story of Prince Harry and Meghan in Britain and crack in Royal Family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X