லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிராக களமிறங்கும் டெக்சோமெத்தசோன்.. நம்ம ஊர் மருந்துக் கடைகளில் ரொம்பப் பிரபலம்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு அருமருந்தாக அமைந்துள்ளது டெக்சாமெத்தசோன் (Dexamethasone). கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது.

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது. எந்த மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது டெக்சாமெத்தசோன் (Dexamethasone) எனப்படும் புதிய வகை மருந்து அருமருந்தாக திகழ்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Dexamethasone விலை மலிவானது..நம்ம ஊர் மருந்துக் கடைகளில் ரொம்பப் பிரபலம்

    டெக்சாமெத்தசோன் 1960ல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து. இது வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, குடலில் ஏற்படும் எரிச்சல் தொடர்பான பிரச்சனை, சில வகை கேன்சர், உடலில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த டெக்சாமெத்தசோன் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துதான் இப்போது கொரோனா வைரஸ்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 40 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 25 சதவிகிதத்தில் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.

    கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்.. ஆச்சர்யம் தரும் கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்.. ஆச்சர்யம் தரும் "டெக்சாமெத்தசோன்" மருந்து.. ஹு நல்ல செய்தி!

    நோயாளிகள் குணம்

    நோயாளிகள் குணம்

    உலக சுகாதார மையம் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு தெரிவித்துள்ளது. டெக்சாமெத்தசோன் (Dexamethasone) மருந்து பயன்படுத்தியதில், வெண்டிலேட்டர் பயன்படுத்தும் கொரோனா நோயாளிகளில் 3ல் ஒருவர் வேகமாக குணமடைந்து இருக்கிறார். அதேபோல் ஆக்சிஜன் உதவியுடன் செயல்படும் நோயாளிகளில் 5ல் ஒருவர் எளிதாக குணமாகிறார். இவர்களின் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. இது மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் முடிவு என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மருந்துகளை கொரோனாவின் சிகிச்சைக்கு பயன்படுத்தவும் தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க இருக்கும் 100 முன்னணி நிறுவனங்கள் இப்படி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகிறது.

    டெக்சாமெத்தசோன் மருந்து

    டெக்சாமெத்தசோன் மருந்து

    கொரோனா வைரசுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஏற்கனவே தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு சிகிச்சை தருவதில் டெக்சாமெத்தசோன் மருந்து அதிக பலன் அளிப்பதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

    டெக்சாமெத்தசோன் பயன்கள்

    டெக்சாமெத்தசோன் பயன்கள்

    டெக்சாமெத்தசோன் என்பது 1960ல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஆகும். வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, குடலில் ஏற்படும் எரிச்சல் தொடர்பான பிரச்சனை, சில வகை கேன்சர், உடலில் ஏற்படும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த டெக்சாமெத்தசோன் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் டெக்சாமெத்தசோன் பயன்படுத்தப்படுகிறது. இதன் பார்முலாவை கொஞ்சம் மாற்றி பல்வேறு நோய்களுக்கு எதிராக டெக்சாமெத்தசோனை பயன்படுத்த முடியும்.

    ஆக்ஸ்போர்ட் பரிசோதனை வெற்றி

    ஆக்ஸ்போர்ட் பரிசோதனை வெற்றி

    டெக்சாமெத்தசோன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்ட் பயன்படுத்தியது. இதற்காக 11500 நபர்களிடம் 175 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்பட்டது. இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டெக்சாமெத்தசோன் மருந்து உலக அளவில் பெரும்பாலான நாடுகளிடம் உள்ளதாகவும், இந்த மருந்துக்கான செலவும் மிகவும் குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆராய்ச்சிக்கு ஹூ வரவேற்பு

    ஆராய்ச்சிக்கு ஹூ வரவேற்பு

    கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான டெக்சாமெத்தசோன் மருந்து நிச்சயம் பலன் அளிக்கும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.டெக்சாமெத்தசோன் பயன்பாடு நல்ல பலன் அளிப்பதாக அறிய வந்துள்ளோம். எங்களுக்கு இது நம்பிக்கை அளிக்கிறது. ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியை நாங்கள் வரவேற்கிறோம் என்று உலக சுகாதார மையம் பாராட்டியுள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவின் புள்ளி விவரங்களை சோதனை செய்ய இருக்கிறோம். அதேபோல் டெக்சாமெத்தசோன் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்வோம் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

    English summary
    Researchers in England say they have the first evidence that the widely available steroid called dexamethasone reduced deaths by up to one third in severely ill ventilated patients.After 28 days, it had reduced deaths by 35 per cent in patients who needed treatment with breathing machines
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X