லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"விநோதம்.!" டவுசர், சட்டை எல்லாத்தையும் தலைகீழாகப் போடும் லண்டன்வாசிகள்.. எதற்காக தெரியுமா

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பொதுமக்கள் திடீரென உடைகளை தலைகீழாக அணி தொடங்கி உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

உலகின் மிகவும் நாகரிகமான நகரங்களில் ஒன்றாக லண்டன் கருதப்படுகிறது. உடை கலாசாரத்திலும் பல புதிய உடை வகைகளை லண்டன் நமக்கு அறிமுகம் செய்து உள்ளது.

இந்தச் சூழலில் லண்டனில் பொதுமக்கள் திடீரென உடைகளை தலைகீழாக அணி தொடங்கி உள்ளனர். இதற்கான காரணம் தெரியாமல் ஒட்டுமொத்த இணைய உலகமே குழப்பத்தில் இருக்கிறது.

லண்டன் காந்தி சிலையில் இருந்த அழுக்கு..சுத்தம் செய்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி..குவியும் பாராட்டு லண்டன் காந்தி சிலையில் இருந்த அழுக்கு..சுத்தம் செய்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி..குவியும் பாராட்டு

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்கள் ஆடைகளை தலைகீழாக அணியத் தொடங்கி உள்ளனர். இது தொடர்பான படங்களையும் அவர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். முதலில் இதற்கான காரணம் நெட்டிசன்கள் யாருக்கும் புரியவில்லை. அவசரமாக வெளியே கிளம்பும் போது, எதோ சிலர் ஆடைகளை தலைகீழாக அணிந்து இருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம்.

 தலைகீழாக

தலைகீழாக

உண்மையில் இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பரப்புரை முயற்சியாகும். உலகெங்கும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கவே இப்படியொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அங்குள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்து உள்ளது. அவர்கள் லண்டன்வாசிகளை தலைகீழாக ஆடை அணிந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த ஊக்குவிக்கிறார்கள்.

எதற்கு

எதற்கு

இது தொடர்பான படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் மெட்ரோ ரயில் பெட்டிகள், காபி ஷாப்களில் உள்ளவர்கள் தங்கள் ஆடைகளை தலைகீழாகப் போட்டு இருப்பது தெரிகிறது. எந்த உடை அணிந்தாலும் அவர்கள் உள்பக்கத்தை வெளியே தெரியும்படி தலைகீழாகவே உடையை அணிந்து உள்ளனர். "அனைத்து விதமான ஆடைகளையும் இப்படி தலைகீழாக அணிவதன் மூலம் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வை லண்டன்வாசிகள் ஏற்படுத்துகின்றனர்" என்று அதில் பதிவிட்டு வருகின்றனர்.

 பிரசாரம்

பிரசாரம்

இந்த பரப்புரை முயற்சி சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்துவிட்டது என்றே சொல்லலாம். இதற்காக Ask me why என்ற ஹேஸ்டேக்கும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் தான் பொதுமக்கள் தலைகீழாக ஆடைகளை அணிந்து அதைப் பதிவிட்டு வருகின்றனர். Ask me why ஹேஷ்டேக்கில் அவர்கள் ஆடையை ஏன் தலைகீழாக அணிகிறார்கள் என்பது குறித்தும் அனைத்து உறவுகளிலும் இரு தரப்பும் பேசிக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபலங்கள்

பிரபலங்கள்

அதேபோல பல விளையாட்டு பிரபலங்களும் இந்த விழிப்புணர்வு முயற்சியில் கைகோர்த்து உள்ளனர். அவர்கள் அனைவரும் தலைகீழாக உடை அணிந்தும் தற்கொலை விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் உடனும் படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். If U Care Share என்ற அமைப்பு தான், இந்த பிரசாரத்தை முன்னெடுத்து உள்ளது. இதன் மூலம் தற்கொலை தொடர்பான எண்ணங்களை மக்களிடையே ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது.

English summary
London People are wearing their clothes inside out: Suicide prevention in lodonw started a differnet campaign to for creating awareness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X