• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மம்மி அவரு பேரு என்ன? லைவ் ஷோவில் பிபிசி தொகுப்பாளரை கேள்வி கேட்ட சிறுமி - வைரல் வீடியோ

|

லண்டன்: கொரோனா வைரஸ் பரவி இன்றைய கால கட்டத்தில் எல்லோருமே ஒர்க் ப்ரம் ஹோம் என்றாகிவிட்டது. பல நிபுணர்கள் வீட்டில் இருந்தவாரே ஆன்லைனில் வேலை செய்து கருத்துக்களை பதிவிடுகின்றனர். தொலைக்காட்சிகளில் ஆன்லைன் இன்டர்வியூக்களிலும் பேசுகின்றனர். லண்டனில் டாக்டர் கிளேர் வென்ஹாம் பிபிசி தொகுப்பாளர் கிறிஸ்டியன் ஃபிரேசருடன் லைவ் இன்டர்வியூவில் இருந்த போது குட்டி மகளின் குறுக்கீடு அந்த இன்டர்வியூவின் சுவாரஸ்யத்தையே அதிகரித்துள்ளது. பரபரப்பாக போய்கொண்டிருந்த லைவ் இன்டர்வியூவில் குறுக்கிட்டு அவர் யாரு மம்மி அவரோட பேரு என்ன என்று கேட்டு ஆங்கரையே அசரடித்திருக்கிறாள்.

சில நேரங்களில் குழந்தைகள் செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த கால கட்டத்தில் பள்ளிக்கும் போக முடியாமல் வெளியே விளையாடவும் முடியாமல் குழந்தைகளும் வீட்டிற்குள் அடங்கியுள்ளனர். லாக்டவுன் பற்றி உலகம் முழுவதும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.

Whats his name Mummy? childs asks BBC anchor name

பிபிசி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளர் கிறிஸ்டியன் ஃபிரேசர் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் உலகளாவிய சுகாதார கொள்கை நிபுணர் டாக்டர் கிளேர் வென்ஹாம் உடன் லைவ் இன்டர்வியூவில் பேசிக்கொண்டிருந்தார். டாக்டர் கிளேர் வீட்டில் இருந்தவாரே ஆங்கரின் கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது பின்னால் குட்டிச்சிறுமியின் சுட்டித்தனங்களும் தெரிந்தது. ஒரு யுனிகார்ன் படத்தை எங்கே வைப்பது என்று யோசித்து இடத்தை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தார்.

அதைப்பார்த்து சிரித்தவாறே கிறிஸ்டியன், சிறுமியின் பெயரை கேட்கிறார். அதற்கு அவர் ஸ்கார்லெட் என்ற கூற அது அழகான யுனிகார்ன் என்ற பேச நகைச்சுவையாக திரும்பியது. அப்போது, தனது பெயர் திடீரென அடிபடுகிறதே என்று கேட்டு அம்மாவின் பக்கத்தில் வந்தார் அந்த சிறுமி. அம்மா யாருடனோ பேசுகிறார் என்பதை உணர்ந்து அம்மா யாரு அவர் பெயர் என்ன என்று மாறி மாறி கேட்க, அதற்கு அம்மாவோ, ஸ்ஸ்ஸ் என்று செல்லமாக அதட்டினார். எதிர்புறத்தில் இருந்த கிறிஸ்டியன், தனது பெயரை சிரித்தவாறே கூறினார்.

நீங்க தான் சார் ரியல் ஹீரோ.. ஒரே நாளில் இணையத்தில் பிரபலமான காவலர்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

அதற்கு சிறுமி ஸ்கார்லெட், பிபிசி ஆங்கரிடம், கிரிஸ்டியன், என்னோட மம்மி எங்கே போக வேண்டும் என்று நான் தீர்மானிக்கிறேன் என்று சொன்னதோடு, மம்பி எங்கு விரும்புகிறீர்கள் என்று கேட்டு இன்டர்வியூவை தனது பக்கம் திருப்பிவிட்டாள். உடனே டாக்டர் கிளேர், நீ போய் யூனிகார்ன் படத்தை அங்கே வைத்து விட்டு வா என்று கூறி தொகுப்பாளரிடம் குழந்தையின் குறுக்கீட்டுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. பல லட்சக்கணக்கோர் பார்த்து தங்களின் கமெண்ட்களை சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர். பிபிசி ஆங்கரையே அசரடித்து விட்டாளே அந்த சிறுமி என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
A Child interrupted a live interview on BBC News between anchor Christian Fraser and Dr Clare Wenham.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more