லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விஜய் மல்லையாவை உடனடியாக, இந்தியாவிற்கு நாடு கடத்த முடியாது.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியாவில் நடைபெற்ற ரூ.9000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மலலையா உடனடியாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவது கேள்விக்குறியே.

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகளை மேற்பார்வையிட சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையிலான குழு லண்டன் விரைந்துள்ளது. இந்த குழுவில் அமலாக்கத்துறையை சேர்ந்த இருவர் குழுவும் கூட இடம் பெற்றுள்ளது.

When will Vijay Mallya returns to India?

[ விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு... லண்டன் நீதிமன்றம் அதிரடி]

இருப்பினும், இந்த உத்தரவுக்கு எதிராக, அந்த நாட்டு உயர் நீதிமன்றத்தில் மல்லைா அப்பீல் செய்ய முடியும். 14 நாட்களுக்குள் இவ்வாறு அவர் அப்பீல் செய்ய வேண்டும். அவ்வாறு மல்லையா அப்பீல் செய்யாவிட்டால், பிரிட்டன் உள்துறை செயலாளரும் இதற்கு ஒப்புக்கொண்டால், உள்துறை செயலாளரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 28 நாட்களில், மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்.

இப்போது நீதிமன்றம் மட்டுமே மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரிட்டன் உள்துறை செயலாளர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை மல்லையா அப்பீல் செய்தால், அங்கும் அவரை நாடு கடத்த உத்தரவு பிறப்பித்தால், அப்பீல் செய்யப்பட்ட தினத்திலிருந்து 28 நாட்களுக்குள் மல்லையா நாடு கடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.

எனவே, மல்லையா உடனேயே இந்தியா வருவது என்பது சாத்தியம் இல்லாதது.

English summary
In case the Vijay Mallya does not file an appeal, and Secretary of State agrees with the magistrate's decision, then the individual must be extradited from the UK within 28 days of the Home Secretary's extradition order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X