லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா நோயாளிகளுக்கு... கார்டிகோஸ்டீராய்டு மருந்து... உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை!!

Google Oneindia Tamil News

லண்டன்: பொதுவாக ஆஸ்துமா சிகிச்சைக்கு மருத்துவர்கள் வழங்கும் கார்டிகோஸ்டீராய்டு கொரோனா இறப்பு சதவீதத்தை குறைக்கும் என்பதை ஏழு நாடுகள் கண்டறிந்துள்ளன. இதையடுத்து இந்த மருந்தை மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்த ஆய்வில், ''மோசமாக பாதிக்கப்பட்டு இருந்த கொரோனா நோயாளிகளுக்கு கார்டிகோஸ்டீராய்டு கொடுத்த பின்னர் 68 சதவீதம் பேர் ககுனமடைந்துள்ளனர். அதேசமயம் இந்த மருந்து இல்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டதில் 60 சதவீதம் பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

WHO Recommends Steroid to use On Critical Covid 19 severe Patients

இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் கிளினிக்கல் கேர் தலைவர் ஜனெட் டியாஸ் தெரிவித்து இருக்கும் தகவலில், ''மோசமான முறையில் கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்து கொடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்கிறது. மோசமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆயிரம் பேருக்கு இந்த மருந்து கொடுத்ததில் 87 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரிஸ்டல் பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவு பேராசிரியர் ஜொனாதன் ஸ்டெர்ன் கூறுகையில், ''ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த மருந்தை மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கலாம். அவர்களது உயிரை காப்பாற்ற உதவும். பிரிட்டன், பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில் நல்ல பலன் கிடைத்துள்ளது. வயது, பாலின வித்தியாசம் இன்றி இந்த மருந்தை பரிந்துரை செய்யலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரேசில் எட்டாத உயரம்.. ஒரே நாளில் 83000 பேருக்கு இந்தியாவில் தொற்று அமெரிக்கா, பிரேசில் எட்டாத உயரம்.. ஒரே நாளில் 83000 பேருக்கு இந்தியாவில் தொற்று

இதற்கு முன்னதாக டெக்ஸமெதசோன் ஸ்டீராய்டு பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் நல்ல பலன் அளிப்பதாக கூறப்பட்டு இருந்தது. ரெம்டிசிவியர் மருந்தை அமெரிக்காவில் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அந்த நாடு அனுமதி அளித்து இருந்து என்பது குறிப்பிட்டத்தக்கது.

Recommended Video

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயத்தை குடிங்க.. ஆயுர்வேத டாக்டர் கவுதமன் சொன்ன சூப்பர் அட்வைஸ்

    English summary
    WHO Recommends Steroid to use On Critical Covid 19 Patients
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X