லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ காட்! மொத்த இங்கிலாந்து கிரிக்கெட் உலகத்தையும் "கதறவிட்ட" இந்திய வீராங்கனை தீப்தி.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மா எடுத்த விக்கெட் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வென்றுள்ளது. நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. 45.4 ஓவரில் இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

பிரிட்டன் இந்து - முஸ்லிம் மோதல்.. இந்து சின்னங்களுக்காக குரல் கொடுத்த இந்திய தூதரகம்! கடும் கண்டனம் பிரிட்டன் இந்து - முஸ்லிம் மோதல்.. இந்து சின்னங்களுக்காக குரல் கொடுத்த இந்திய தூதரகம்! கடும் கண்டனம்

இந்திய பெண்கள் அணி

இந்திய பெண்கள் அணி

இதனால் எங்கே இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்து விடுமோ என்றுதான் கருதப்பட்டது. ஆனால் அதன்பின் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 153 ரன்கள் இருக்கும் போது அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதில் இங்கிலாந்து பெண்கள் அணி கடைசி விக்கெட்டை இந்தியா எப்படி எடுத்தது என்பதுதான் சர்ச்சையாகி உள்ளது.

தீப்தி சர்மா

தீப்தி சர்மா

இந்த போட்டியில் இந்தியா வீசிய 43.4வது பந்தில் தீப்தி சர்மா இங்கிலாந்து வீராங்கனை சார்லட் டியானை மன்கட் செய்தார். அதாவது நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்த டியான் கிரீஸை தாண்டி ரொம்ப தூரம் இருந்தார். இதை பார்த்ததும் தீப்தி சர்மா அவரை விக்கெட் எடுத்தார். இதை மன்கட் என்று அழைப்பார்கள். அதாவது நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருக்கும் வீரர், வீராங்கனை கிரீஸை தாண்டி இருந்தால் அவரை விக்கெட் எடுக்கலாம்.

விக்கெட்

விக்கெட்

முன்பு இந்த விக்கெட்டை எடுத்தால் அது கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு எதிரானது என்று விமர்சனங்கள் வைப்பார்கள். அஸ்வின் கூட ஐபிஎல்லில் பட்லர் விக்கெட்டை இப்படி எடுத்து இருக்கிறார். அப்போது அதை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் அதே சமயம் ஒரு நான் ஸ்டிரைக்கர் பிட்சில் கிரீஸில் இருந்து சில மீட்டர்கள் தள்ளி நிற்பது என்பது தவறானது. இதன் மூலம் அவர் கூடுதல் ரன்களை எளிதாக எடுக்க முடியும். சில மீட்டர்கள்தான் என்றாலும்.. பேட்ஸ்மேன் இப்படி நகர்ந்து நிற்பது மிகப்பெரிய தவறு.

மன்கட்

மன்கட்

அதிலும் கடைசி ஓவர்களில் இப்படி நிற்பதன் மூலம் ஆட்டத்தின் போக்கே மாறும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி இருக்கும் போது நேற்று டியான் இப்படி கோட்டை தாண்டி நின்றதும் அவரை தீப்தி மன்கட் செய்தார். இதைத்தான் இங்கிலாந்து கிரிக்கெட் உலகம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. தீப்தி ஏமாற்றிவிட்டார். அவர் தவறு செய்துவிட்டார். தவறான நோக்கத்தில் விக்கெட் எடுத்துள்ளார்.

இங்கிலாந்து புலம்பல்

இங்கிலாந்து புலம்பல்

கிரிக்கெட்டின் ஆன்மாவிற்கு இது எதிரானது என்று இங்கிலாந்து வீரர்கள், வீராங்கனைகள், கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதே சமயம் இந்திய வீரர் அஸ்வின், முன்னாள் வீரர் சேவாக் போன்றவர்கள் தீப்திக்கு ஆதரவாக பேசி உள்ளனர். மன்கட் என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக உள்ளது. அதில் என்ன தவறு. ஐசிசி அனுமதித்த விக்கெட் விதிதான் இது.

 ஐசிசி விதி

ஐசிசி விதி

இப்போது இது ரன் அவுட் கணக்கில்தான் வருகிறது. அப்படி இருக்கும் போது அவர் தவறு எதுவும் செய்யவில்லை. இதே தொடரில் உங்களின் கீப்பர் கேட்ச் பிடிக்காமல் கேட்ச் பிடித்ததாக பொய் சொன்னாரே அதை பற்றி பேசுவீர்களா? உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் பவுண்டரி அடிப்படையில் வென்றீர்களே அது விதி தானே? அதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கடுமையான விமர்சனங்களை இந்திய தரப்பும் வைத்து வருகிறது.

English summary
Why does Deepti Sharma mankad wicket against England Woman team create controversy?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X