லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்கெடுப்பு ஒத்திவைப்பு.. இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க வெற்றியா?

Google Oneindia Tamil News

லண்டன்: குடியுரிமை சட்டம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

குடியுரிமை சட்டம் குறித்து கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதன் மீதான விவாதம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு எம்பிக்கள் சிஏஏ ஆதரவாகவும் பாகிஸ்தான் வம்சாவளியினர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலர் நடுநிலையான கருத்துகளை தெரிவித்தனர்.

சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம்.. பெரும்பாலான எம்பிக்கள் இந்தியாவுக்கு ஆதரவு சிஏஏவுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதம்.. பெரும்பாலான எம்பிக்கள் இந்தியாவுக்கு ஆதரவு

குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம்

இந்த விவாதத்தை தொடர்ந்து இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு திடீரென மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இனி வரும் காலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

கோரிக்கை

கோரிக்கை

அப்போது சட்டப்படி அனைவரும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை வாக்கெடுப்பை ஒத்திவைப்பது சிறந்தது என தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க சில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு விவகாரம்

உள்நாட்டு விவகாரம்

இந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் ராஜாங்க ரீதியில் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வரப்பட்டது முதல் இதை இந்தியா எதிர்த்து வருகிறது. மேலும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி வந்தது.

இந்திய நண்பர்கள்

இந்திய நண்பர்கள்

இந்த தீர்மானங்கள் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையேயான நட்புறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் இவர்களது தீர்மானம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் இந்திய அரசு உறுதிப்பட தெரிவித்துவிட்டது. வாக்கெடுப்பு ஒத்திவைப்பு குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு என்பது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவின் நண்பர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றன.

English summary
Delhi sources says that postponing of voting in EU a diplomatic victory for India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X