லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை.. லண்டன் நீதிமன்றம் அதிரடி

Google Oneindia Tamil News

லண்டன்: ஜாமின் நிபந்தனையை மீறிவிட்டதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்ததையும், உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களின் ஊழல் குறித்தும் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே (47 வயது).

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா கடந்த 2012ம் ஆண்டு ஜுலியன் அசாஞ்சேவை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறக்கியது. இந்த விஷயத்தில் கைதானால் அமெரிக்காவைச் சேர்ந்த அசாஞ்சே 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது.

பர்தாவுக்கு தடை கேட்கும் சிவசேனா.. நாட்டை பிரித்தாளும் எண்ணம் இது.. ஓவைசி பாய்ச்சல்பர்தாவுக்கு தடை கேட்கும் சிவசேனா.. நாட்டை பிரித்தாளும் எண்ணம் இது.. ஓவைசி பாய்ச்சல்

பலாத்கார புகார்

பலாத்கார புகார்

இதற்கிடையே சுவிடனைச் சேர்ந்த 2 பெண்கள் அசாஞ்சே மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறினார்கள். இதை வைத்து லண்டனில் இருந்த அவரை கைது செய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டது.

புகாருக்கு மறுப்பு

புகாருக்கு மறுப்பு

ஆனால் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்த அசாஞ்சே, அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசிடம் இருந்து தப்பிப்பதற்காக லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்திற்குள் அகதியாக தஞ்சம் புகுந்தார்.

அசாஞ்சே மீது வழக்கு

அசாஞ்சே மீது வழக்கு

இந்நிலையில் லண்டனில் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது பாலியல் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஜாமின் பெற்று ஈக்வடார் தூதரகத்திலேயே தொடர்ந்து அசாஞ்சே வசித்து வந்தார்.

லண்டன் நீதிமன்றம்

லண்டன் நீதிமன்றம்

இந்நிலையில் கடந்த மாதம் ஜாமின் நிபந்தனைகளை மீறியதாக லண்டனின் உள்ள சௌத்வார்க் கிரவுன் நீதிமன்றத்தில் அசாஞ்சே மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் பேரில் ஜுலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டார்.இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சுக்கு 50 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

English summary
Wikileaks co-founder Julian Assange has been sentenced to 50 weeks in jail for breaching the Bail Act last month after his arrest at the Ecuadorian Embassy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X