போட்டோவில் இருந்த கட்டை விரல்! காதலனின் கள்ள உறவை கண்டுபிடித்த காதலி.. கிளைமேக்ஸில் செம ட்விஸ்ட்
லண்டன்: ஒரு போட்டோவில் இருந்த கட்டை விரலால் ஒரு காதலே முடிவுக்கு வந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!
பிரபல வீடியோ செயலியான டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் உலகெங்கும் அந்த செயலியில் கோடிக் கணக்கான பயனாளிகள் உள்ளனர். பலரும் அதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”
அதுபோலத் தான் ஜெட்டா என்ற இளம்பெண் தன்னுடைய பிரேக் அப் கதையை டிக்டாக் செயலியில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

இளம் பெண்
ஜெட்டா அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உடன் பழக ஆரம்பித்துள்ளார். சில மாதங்கள் இருவரும் டேட்டிங் செய்த நிலையில், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. ஜெட்டாவை உருகி உருகிக் காதலித்த அந்த இளைஞர், வேறு ஒரு பெண்ணை இனி கனவிலும் நினைக்கப் போவதில்லை எனச் சத்தியம் எல்லாம் செய்துள்ளான். இருவருக்கும் இடையே சூப்பரான உறவு சென்று கொண்டு இருக்கும் போது ஒரே ஒரு படம் அவர்கள் காதலை அப்படியே மாற்றியது.

கட்டை விரல்
ஒரு நாள் காலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, பெண் ஒருவரின் படத்தைப் பார்த்துள்ளார். உணவகம் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த படத்தில் இளம் பெண் மட்டும் இருந்தாலும் கூட, ஓரத்தில் ஆணின் கட்டை விரல் மட்டும் தெரிந்தது. அதைப் பார்த்ததும் ஜெட்டாவுக்கு அது தனது காதலன் கை தான் எனத் தெரிந்துவிட்டது. மேலும், அந்த படத்தில் இருக்கும் உணவும் காதலன் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவாகவே இருந்துள்ளது.

பொய்
காதலனைச் சந்தித்த உடனேயே இது குறித்து நேரடியாகவே கேட்டுள்ளார். இருந்த போதிலும், அதை இளைஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்து உடன் பலரும் அதைப் பார்க்கத் தொடங்கி உள்ளனர். சில நாட்களிலேயே அதைப் பல லட்சம் பேரும் பார்த்துவிட்டனர். இதையடுத்து பலரும் ஜெட்டாவிடம் அடுத்து என்ன ஆனது, யார் அந்த பெண் என ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

ட்விஸ்ட்
இதையடுத்து ஜெட்டா இது குறித்து விளக்கமும் அளித்துள்ளார். அதில் அவர், "அந்த பெண் தன்னை பற்றி பொது வெளியில் எதுவும் சொல்ல வேண்டாம் எனக் கூறி விட்டார். ஏனென்றால், அந்த பெண்ணும் என்னைப் போலவே ஏமாற்றப்பட்டு இருந்தார். அந்த படத்தைப் பார்த்ததும் நான் அந்த பெண்ணுக்கு மெசேஜ் செய்தேன். அப்போது தான் இருவரையும் அவர் ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.

2.5 ஆண்டுகள்
இருவரும் இது குறித்துக் கேட்ட போது, ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி ஏமாற்றிவிட்டான். அவர் இன்னும் அந்த பெண் உடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், இந்த சண்டை உடன் நான் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன். அந்த நபர் என்னை சுமார் 2.5 ஆண்டுகளுக்கு மேலாகவே ஏமாற்றி வந்துள்ளார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.