• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"கிரேட் எஸ்கேப்".. இந்த ரணகளத்திலும் பார்த்தீங்களா.. உலகையே வியக்க வைத்த "சம்பாவும், அனகலாவும்.."

Google Oneindia Tamil News

லண்டன்: உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து கொண்டிருக்கும்போது, சிங்கம் ஒன்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது.. பல நாட்டு தலைவர்கள் சொல்லியும் போரை ரஷ்யா நிறுத்தவில்லை..

இந்த கொடூர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.. ஏராளமான அப்பாவி மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடி கொண்டிருக்கிறார்கள்..

 தியேட்டர்கள்

தியேட்டர்கள்

தியேட்டர்கள், ரெயில்வே சுரங்க பாதை, பதுங்கு குழிகள் என எங்கெல்லாம் ஓடி ஒளிந்து கொள்ள முடியுமோ அங்கே தஞ்சம் அடைந்துள்ளனர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால், விலங்குகள் அதைவிட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க ஆட்கள் யாரும் இல்லை.. அனைத்து மிருகங்களும் பசியால் தவித்து வருகின்றன.. அந்தவகையில்தான் உக்ரைனில் உள்ள ஜிபோரிஜியாவில் இருக்கும் ஒரு மிருகக்காட்சி சாலையில் சிங்கம் ஒன்று தவித்துள்ளது.. அந்த சிங்கம் பெயர் சிம்பா..

சிங்கம்

சிங்கம்

ஆனால், நடந்து வரும் போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு இடம் மாற்றம் செய்துவிட்டனர்.. சிங்கத்தை போலவே அனகலா என்ற ஓநாயையும் பிடித்து ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்து கொண்டு வந்துவிட்டனர்.. ஒருபக்கம் போர் நடந்து கொண்டிருக்க, அந்த ரணகளத்திற்கு நடுவில் 4 நாள் டிராவல் ஆகி ருமேனியவுக்கு வந்து சேர்ந்துள்ளது சம்பாவும், அனகலாவும்.. இப்போது ராடெவுட்டி பகுதியில் ஒரு உயிரியல் பூங்காவில் இரண்டுமே நலமாக இருக்கின்றன..

 நடைமுறை சிக்கல்

நடைமுறை சிக்கல்

ஆனால், இந்த 4 நாள் பயணம் ஆபத்தானது.. நடைமுறை சிக்கலும் எழுந்தது. காரணம், விலங்குகளை வாகனங்களில் ஏற்றி செல்வதற்கு, சிரட் எல்லையில் அனுமதி கிடைக்கவில்லை.. அதனால், உக்ரைன் - ருமேனியா 2 நாட்டுக்கும் இடைப்பட்ட எல்லை வழியாக அதாவது சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்துக்கு வேனில் ஏற்றி கொண்டுவர வேண்டியதாயிற்று.. இதற்கு நடுவில் பெரிய பெரிய மலைகளையும் கடக்க வேண்டியிருந்திருக்கிறது.

 சிங்கம் - ஓநாய்

சிங்கம் - ஓநாய்

இவ்வளவையும் விலங்குகள் உரிமை குழு ரிஸ்க் எடுத்து செய்துள்ளது.. இதுகுறித்து அக்குழுவில் உள்ள குழுவின் செபாஸ்டியன் தரலுங்கா என்பவர் சொல்லும்போது, "ருமேனியாவின் சிரட் எல்லையில் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.. அதனால், இரு நாடுகளின் பொதுவான எல்லை வழியாக வேன் மூலம் செல்ல வேண்டியிருந்தது.. இந்த பயண வெற்றிக்கு காரணம், பிரிட்டனை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் டிம் லாக்ஸ் என்பவர்தான்.. 45 வயதான டிம் லாக்ஸ், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போரில் ஈடுபட்டவர்" என்றார்.

 சிங்கம் - கூண்டுக்குள்

சிங்கம் - கூண்டுக்குள்

இதைபற்றி டிம் லாக்ஸ் சொல்லும்போது, "ருமேனியா உயிரியல் பூங்காவின் சூழ்நிலைக்கு விலங்குகள் பழகிவருகின்றன. வரும்வழியில் செக்போஸ்டில் சிங்கம், ஓநாயை ஏற்றிச் செல்கிறோம் என்று சொன்னபோது, அவர்கள் குழம்பிவிட்டனர்.. நம்பவே இல்லை.. அங்கே போர் நடந்து கொண்டிருக்கிறது, இப்படியெல்லாம் காமெடி பண்ணாதீங்க என்றார் ஒரு அதிகாரி.. அப்பறம் வேனை திறந்து காட்டினோம்.. கூண்டுக்குள் இருந்த சிங்கத்தையும், ஓநாயையும் பார்த்தபோதுதான் அவர் மிரண்டு போய் நம்பினார்" என்றார்.. ஆனால் இவ்வளவு ரிஸ்க்கில்தான் 4 நாள் டிராவல் ஆகி வந்திருக்கிறோம் என்பதுகூட தெரியாமல் செம ஜாலியாக இருக்கின்றன சம்பாவும், அனகலாவும்..!

English summary
wonderful lion and wolf shifted to romania from ukraine after four days: Ukrain-Russia war
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X