லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் கொரோனாவால் நான்கே நாட்டில் தான் மோசமான பாதிப்பு.. அதில் இந்தியாவும் ஒன்று

Google Oneindia Tamil News

லண்டன்: தற்போது கொரோனா தொற்றால் உலகில் நான்கே நாடுகளில் தான் மிக மோசமான பாதிப்பு நிலவுகிறது. அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது. மெக்ஸிகோ நான்காவது இடத்தில் உள்ளது.

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,36,81,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 5,86,127 பேர் உயிரிழந்துள்ளனர். 8,027,789 பேர் குணமடைந்துள்ளனர். உலகில் கொரோனா பாதிப்புடன் 50,67,142 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 3,615,707 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140100 ஆக உயர்ந்துள்ளது. அங்குஒரேநாளில் புதிதாக 70,630 பேர் பாதிக்கப்பட்டனர். 957 பேர் இறந்துள்ளனர்.

தென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு தென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு

உலகில் முதலிடம்

உலகில் முதலிடம்

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 19.70 லட்சமாக உயர்ந்து உள்ளது. உலகிலேயே மிக அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 1261 பேர் பிரேசிலில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 75523 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் நேற்று புதிதாக 39705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கடும் பாதிப்பு

இந்தியாவில் கடும் பாதிப்பு

உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 32,682 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 970169 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 614 பேர் உயிரிழந்தனர். இதுவரை 24929 பேர் பலியாகி உள்ளனர்.

மெக்ஸிகோவில் மோசம்

மெக்ஸிகோவில் மோசம்

மெக்ஸிகோ உலக கொரோனா பாதிப்பில் 7வது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 311486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 7051 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் உயிரிழப்பு என்பது மிகமிக அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 836 பேர் பலியாகினர். தினமும் மெக்ஸிகோவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுவரை மெக்ஸிகோவில் 36,327 பேர் உயிரிழந்துள்ளனர். குறைவான பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு அதிகரிப்பது மெக்ஸிகோவில் கவலையை அதிகரித்துள்ளது.

கொரோனாவை வென்ற ஐரோப்பா

கொரோனாவை வென்ற ஐரோப்பா

ஆறுதலான விஷயம் என்னவென்றால் ஸ்பெயினில் புதிதாக 4 பேர் மட்டுமே கொரோனாவால் இறந்துள்ளனர். ஸ்பெயின் மட்டுமல்ல, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்வீடன், பெல்ஜியம், போலந்து, நெதர்லாந்து, உக்ரைன், ரஷ்யா, பெலாரியஸ், நெதர்லாந்து, ரோமானியா, ஸ்விட்ர்சலாந்து, ஆஸ்ட்ரியா, செர்பியா, அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டன. ரஷ்யாவில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் உயிரிழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மற்ற நாடுகளில் உயிரிழப்பும் மிக மிக குறைவு, பாதிப்பும் குறைந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகள் இயல்பு நிலையை எட்டிவிட்டதாக தெரிகிறது.

English summary
world corona cases rises to 1,36,81,058, country wise case list . india 3rd highest covid cases country in the world
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X