லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2019ம் ஆண்டின் உலகின் சிறந்த டாப் 100 நகரங்கள் பட்டியலில்.. சென்னை உள்பட 7 இந்திய நகரங்கள்

Google Oneindia Tamil News

லண்டன்: "வலுவான கலாச்சாரங்கள், விதிவிதமான அனுபவங்கள் போட்டிபோடக்கூடிய விலைகள்" ஆகியவற்றால் இந்தியா ஆசியாவின் வலுவான வளர்ந்து வரும் இடமாக (பயண இடம்) மாறியுள்ளது என்று இங்கிலாந்தை மையமாக கொண்ட உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூரோமோனிட்டர் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

உலகளாவிய சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூரோமோனிட்டர் இன்டர்நேஷனல் 2019ம் ஆண்டுக்கான உலக அளவில் சுற்றுலா பயணிகளுக்கான சிறந்த 100 நகரங்களின் பட்டியல் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதில் நம் நாட்டின் தலைநகர் டெல்லி உட்பட ஏழு இந்திய நகரங்கள் 2019ம் ஆண்டுக்கான பயணங்களுக்கு சிறந்த நகரங்களுக்கான 100 நகரங்களின் தரவரிசையில் இடம் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வகையில், ஏழு நகரங்களும் முந்தை ஆண்டைவிட தரவரிசையில் முன்னேறும் என்றும் கணித்துள்ளது.

லண்டன்

லண்டன்

பல மாதங்களாக அரசியல் அமைதியின்மை இருந்த போதிலும், ஹாங்காங் இந்த பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என யூரோமோனிட்டர் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, விடுமுறையை கொண்டாட சிறந்த நகரங்களாக பாங்காக், லண்டன், மக்காவ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடிக்கின்றன.

11வது இடம்

11வது இடம்

இந்த பட்டியலில் அமெரிக்காவின் மிக பிரபலமான நியூயார்க் நகரம் இடம் பெறுகிறது., இது தற்போதைய தரவரிசையில் 11 வது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

8வது இடம்

8வது இடம்

2019 ஆம் ஆண்டில் அதிக உலக அளவிலான சுற்றுலா பயணிகள் விரும்பி வந்த இடத்திற்கான பட்டியலில் தற்போது 11வது இடத்தில் இருக்கும் தலைநகர் டெல்லி, 8 வது பிரபலமான நகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

14 வது இடம்

14 வது இடம்

இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையும் உலகின் மிகவும் பிரபலமான நகர இடங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இது தற்போது பட்டியலில் 14 வது இடத்தில் உள்ளது, மேலும் இது 2019 ஆம் ஆண்டில் ஒரு இடம் முன்னேறி 13வது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் தலைநகரமான மும்பைக்கு இந்த ஆண்டு முடிவதற்குள் 1.20 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்திருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

18வது இடம்

18வது இடம்

தாஜ்மஹால் நகரமான ஆக்ரா இந்த பட்டியலில் 26 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நகருக்கு 2018 ஆம் ஆண்டில் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்தனர்., மேலும் 2019 ஆம் ஆண்டில் எட்டு இடங்கள் முன்னேறி 18வது இடத்தை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

36வது இடம்

36வது இடம்

ஆக்ராவுக்குப் பிறகு, பட்டியலில் உள்ள இந்திய நகரம் என்றால் அது சென்னை தான். "சென்னை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்கள் சராசரியாக 25% வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன" என்று யூரோமோனிட்டரின் அறிக்கை கூறுகிறது. தற்போது 36 வது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை 2019 ல் 31 வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளதாம்.

100வது இடம்

100வது இடம்

பெங்களூரு முதல் முறையாக 100 இடங்களுக்குள் இந்த முறை வருமாம். அந்த அறிக்கையின் கணிப்பு படி 100வது இடத்தை பெங்களூரு பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'பிங்க் சிட்டி' என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் 2019 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான நகர இடங்களின் பட்டியலில் 34 வது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, தற்போது 76 வது இடத்தில் உள்ள கொல்கத்தா, பட்டியலில் 74 வது இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

English summary
World's Most Popular City Destinations In 2019: delhi, Mumbai, chennai and Agra iclude 7 Indian Cities On Listed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X