லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக அளவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2791 பேர் பலி.. ஸ்பெயின் முதலிடம்.. டாப் நாடுகள் விவரம்

Google Oneindia Tamil News

லண்டன்: உலக அளவில் கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 24,089 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்தனர். இன்று காலைக்குள் 24089 ஆக அதிகரித்துவிட்டது. உலகிலேயே நேற்று மிக அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recommended Video

    கொரோனா: உலக அளவில் அமெரிக்காவில்தான் அதிக பாதிப்பு

    உலகம் முழுவதும் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,32,909 பேர் இந்த ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 1,24,349 பேர் குணமாகி உள்ளனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அமெரிக்காவில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. சீனா , இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா 82757 பேருடன் முதலிடத்தை பிடித்துள்ளது எனினும் உயிரிழப்பு என்பது அங்கு மிககுறைந்த அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1194 பேர் இறந்துள்ளனர்.

     கொரோனா கொடூரமானது...போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ. கொரோனா கொடூரமானது...போலீசுக்கு ஒத்துழைப்பு தாங்க.. ஊர் ஊராக மைக் பிடித்து அட்வைஸ் செய்த எம்.எல்.ஏ.

    இத்தாலி 3வது இடம்

    இத்தாலி 3வது இடம்

    இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவில் 81299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3287 பேர் இறந்தனர். மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் 80595 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8215 பேர் இறந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 56347 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 4154 பேர் இறந்துள்ளனர் இந்த நான்கு நாடுகளில் மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஸ்பெயினில் 718 பேர் பலி

    ஸ்பெயினில் 718 பேர் பலி

    இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் 712 பேர் உயிரிழந்தனர். பிரான்சில் நேற்று 365 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று 268 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 157 பேரும், இங்கிலாந்தில் 115 பேரும், நெதர்லாந்தில் 78 பேரும் இறந்தனர்.

    இந்தியாவில் 8 பேர் பலி

    இந்தியாவில் 8 பேர் பலி

    இதேபோல் ஜெர்மனியில் நேற்று 61 பேரும், பெல்ஜியத்தில் 42 பேரும், சுவிட்சர்லாந்தில் 39 பேரும், இந்தோனேசியாவில் 20 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும்,
    பிரேசில் நாட்டில் 18 பேரும், போர்ச்சுகல் நாட்டில் 17 பேரும், துருக்கியில் 16 பேரும், சுவீடனில் 15 பேரும், அயர்லாந்து நாட்டில் 10 பேரும் இறந்தனர். நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 8 பேர் இறந்தனர்.

    மக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

    மக்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வயதானவர்கள், உடலில் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் எமனாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. இதனால் சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கை கடைபிடித்து 21 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் இந்தியாவே காப்பாற்றப்படும் என்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்காவிட்டால் அமெரிக்கா, இத்தாலி நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

    English summary
    Worldwide Total COVID-19 deaths till yesterday 24,073 night, Yesterday's total death toll 2791. countrywide details
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X