லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக பரவும் புதிய வைரஸ்... துணி மாஸ்க் வேலைக்கு ஆகாதாம்.. வேற எது சரியா இருக்கும்?

Google Oneindia Tamil News

லண்டன் : வேகமாக பரவி வரும் புதிய வகை வைரஸில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள மக்களும் தாங்கள் அணியும் மாஸ்க்கின் தரத்தை அதிகரித்து கொள்வது அவசியமாகும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.டாம் பிரண்டன் அறிவுறுத்தி உள்ளார்.

2019 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகம் முழுக்க பரவ துவங்கிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை கோடிக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அதனை செலுத்தும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் உயிரிழப்புக்களை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது.

இந்நிலையில் கொரோனாவின் உருமாறிய மற்றொரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இது முந்தைய வைரஸை விட எளிதாக பரவக் கூடியது என்றும், இதிலிருந்து காத்துக் கொள்ள மக்கள் மாஸ்க் அணிவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும், மாஸ்க்கின் தரத்தை உயர்த்திக் கொள்வது அவசியம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் :

ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் :

கொரோனா வராமல் தடுக்க சர்ஜிக்கல் மாஸ்க் அணியலாம். அதற்கு மேல் துணி மாஸ்க் அணியலாம். பல அடுக்குகளைக் கொண்ட துணி மாஸ்க் பயன்படுத்தலாம். அல்லது என் 95 ரக மாஸ்க்குகளை பயன்படுத்தலாம் என நிபுணுர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

எந்த மாஸ்க் பெஸ்ட் :

எந்த மாஸ்க் பெஸ்ட் :

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.டாம் பிரண்டன் கூறுகையில், துணி மாஸ்க்குகளை விட சர்ஜிக்கல் மாஸ்க் தான் சிறந்தது. அதிலும் தளர்வான மாஸக் அணிவதை விட, இறுக்கமான, கிறுமிகள் உட்புகா வண்ணம் உள்ள மாஸ்க் அணிவதே சிறந்தது. சர்ஜிக்கல் மாஸ்க்கை விட என் 95 ரக மாஸ்க் மேலும் சிறந்தது என்றார்.

எதுக்காக மாஸ்க் அணியனும் :

எதுக்காக மாஸ்க் அணியனும் :

மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் காரணமாகவே பெம்பாலோனோர் மாஸக் அணிந்து செல்கின்றனர். பலர் தரமற்ற மாஸ்க்குகளையும், ஒர் அடுக்கு மாஸ்க்கை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் வாய் மற்றும் மூக்கில் இருந்து வெளியேறும் நீர் துளிகள் மூலம், சார்ஸ்- கோவிட் 2 போன்ற வைரஸ்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை தடுக்கவே மாஸ்க் அணிய அறிவுத்தப்படுகிறது. ஆனால் துணி மாஸ்க்குகள் நீர் துளிகளை மட்டுமே பரவாமல் தடுக்கக் கூடியவை. காற்றில் பரவி இருக்கும் கிருமிகள் எளிதாக மாஸ்க் வழியாக ஊடுருவி பரவக் கூடியவை.

 என் 95 மாஸ்க் எப்படி சிறந்தது :

என் 95 மாஸ்க் எப்படி சிறந்தது :

என் 95 மாஸ்க்கள் காற்றில் பரவி இருக்கும் சிறிய அளவிலான நோய் கிருமிகளையும் 95 சதவீதம் வரை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. சர்ஜிக்கல் மாஸ்க்குகள் சிறிய வகை கிருமிகளை தடுக்க கூடியவை என்றால் என் 95
மாஸ்க்குகள் மைக்ரான் அளவுடைய கிருமிகளையும் தடுக்கக் கூடியவை என அமெரிக்க அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
A surgical mask is better than a cloth mask, a tight-fitting surgical mask is better than a loose-fitting mask, and N95 is better than a surgical mask, says Dr. Tom Frieden, the former director of the Centers for Disease Control and Prevention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X