காருக்குள் "உறவு".. நடுரோட்டில் வசமாக சிக்கிய இளம்ஜோடி.. மிரண்டு போன போலீஸார்..!
லண்டன்: காருக்குள்ளேயே செக்ஸ் வைத்து கொண்டு, ஊரையே சுற்றி வந்திருக்கிறது ஒரு ஜோடி.. லாக்டவுன் சமயத்தில், எல்லா விதிகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஜாலியாக வலம் வந்த ஜோடிக்கு போலீஸ் அபராதம் விதித்துள்ளது.
இங்கிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.. பல நாடுகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாக உள்ளன..

அதிலும், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் 2வது அலை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.. இதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருசில தளர்வுகளும் நீக்கப்பட்டு, மீண்டும் கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
அதனால் அந்தந்த அரசுகளும் இந்த விஷயத்தில் விழிப்புடன் இருந்து கட்டுப்பாடுகளை கண்காணித்து வருகின்றன. ஆனால், காதலர்களை மட்டும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. முன்புபோல இப்போது, காதலர்கள் ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதும் நடப்பதில்லை.. அதனால், ரகசியமாக சந்திக்கும் வேலையில் இறங்கவிடுகின்றனர்.. அப்படி ரகசியமாக சந்திக்கும்போது எல்லையும் மீறிவிடுகின்றனர்.
அப்படித்தான் ஒரு இளம் ஜோடி இங்கிலாந்தில் மாட்டி கொண்டுள்ளது.. டெர்பி பகுதியில், காதலர்கள் 2 பேரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர்.. யாருக்கும் தெரியாமல் காருக்குள்ளிருந்தே சந்தித்து பேசியுள்ளனர்.. பிறகு ஒருகட்டத்தில் திடீரென உடலுறவில் ஈடுபட்டுவிட்டனர்.. இதை அந்த வழியாக சென்ற போலீஸார் பார்த்துவிட்டு, ஷாக் ஆகிவிட்டனர்..
இப்படி பொதுவெளியில் காருக்குள், கொரோனா விதிகளை மீறி செயல்பட்ட 2 பேருக்கும் தலா 200 டாலர்கள் என 400 டாலர்களை அபராதமாக விதித்தனர்.. பிறகு 2 பேரையும் வார்ன் செய்து அனுப்பி வைத்து விட்டனர்... இந்த சம்பவம் வெளியானதையடுத்து, இங்கிலாந்து மக்கள் பல்வேறுபட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.