லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயக் கழிவுகளை எரித்த விவகாரம்.. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 பேர் கைது

Google Oneindia Tamil News

லக்னோ: விவசாயக் கழிவுகளை எரித்ததாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் காற்று மாசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சுவாசிக்கக் கூடிய காற்றை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட அண்டைய மாநிலங்கள் விவசாயிகள் பயிர் அறுவடைக்கு பிறகு மீதமுள்ள கழிவுகளை அகற்ற அதிகம் செலவிட வேண்டிய நிலை உள்ளதால் அந்த கழிவுகளை எரித்து விடுகின்றனர்.

16 farmers arrestd in UP for stubble burning

இதுவே காற்று மாசுவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகள் நிலக் கழிவுகளை எரித்தால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் பயிர் நிலத்தில் உள்ள கழிவுகளை எரித்தனர். இதையடுத்து புகாரின் பேரில் 16 விவசாயிகளை கைது செய்தனர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸ் அதிரடி.. 2 பெண் நிர்வாகிகள் கைது.. 6 பிரிவுகளில் வழக்கு!நித்தியானந்தா ஆசிரமத்தில் குஜராத் போலீஸ் அதிரடி.. 2 பெண் நிர்வாகிகள் கைது.. 6 பிரிவுகளில் வழக்கு!

மேலும் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதை கண்டுக் கொள்ளாத வருவாய் அதிகாரிகள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு விவசாயக் கழிவுகளை எரித்ததாக செயற்கைகோள் மூலம் கண்டுபிடித்து 1046 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
16 farmers arrested in Uttar pradesh after they burnt stubble in their lands which leads to polluted air.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X