லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் அத்வானி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வாக்குமூலம்

Google Oneindia Tamil News

லக்னோ: 1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த வழக்கில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இந்துத்துவா இயக்கத்தினர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனையடுத்து நாடு முழுவதும் மத மோதல்கள் ஏற்பட்டன.

Babri Masjid demolition case: Advani to appear before special CBI court today

இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம், இந்துக்களுக்கே சொந்தமானது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. அதேநேரத்தில் பாபர் மசூதியை இடித்தது தொடர்பாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான வழக்கு லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் இன்னமும் நடைபெற்று வருகிறது.

"நீ எங்கே வேணாலும் போ.. நான் திமுகவுல பதவியில இருக்கேன்".. கறாராக பேசிய சுதாகர்.. இப்ப எஸ்கேப்!

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகி அடுத்தடுத்து வாக்குமூலம் அளித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நேற்று வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில் எல்.கே. அத்வானி இன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

English summary
BJP senior leader LK Advani will appear before a special CBI court today in connection with the 1992 Babri Masjid demolition case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X