லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்படித்தான் மனசு வருகிறதோ.. 4 வயது பிஞ்சு குழந்தை பலாத்காரம்.. அதே ஹத்ராஸில்தான்.. உறவினர் கைது

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 4 வயது சிறுமி உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் சாஸ்னி பகுதியை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இந்த சிறுமியை அவரது உறவினரே பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ருச்சி குப்தா தெரிவித்துள்ளார்.

ஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!! ஹத்ராஸ் பாலியல் வழக்கு...உத்தரப் பிரதேச போலீசாரை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்!!

பெட்ரோல் ஊற்றி தகனம்

பெட்ரோல் ஊற்றி தகனம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காத போலீஸார் தாங்களாகவே பெட்ரோல் ஊற்றி எரித்து தகனம் செய்தனர்.

கண்டனம்

கண்டனம்

இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை கேட்டனர். கடும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

தட்டி கேட்டல்

தட்டி கேட்டல்

உங்கள் மகளாக இருந்தால் இப்படித்தான் தகனம் செய்திருப்பீர்களா என்றும் பணக்கார பெண்ணாக இருந்திருந்தால் இப்படி செய்திருப்பீர்களா என நீதிபதிகள் நறுக் கேள்விகளை கேட்டு உத்தரப்பிரதேச போலீஸாரை குட்டினர். இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சிகள் தட்டி கேட்ட போது போலீஸார் தெனாவட்டாக பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

கோரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் யோகி ஆதித்யநாத் அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

English summary
4 years old girl raped by relative in Hathras. Accused has been arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X