என்னங்க இது! திருமணமான 45 நாளில் 4 மாத கர்ப்பிணியான பெண்! போலீசில் புகாரளித்த உத்தரபிரதேச கணவர்!
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணமாகி ஒன்றரை மாதமே(45 நாள்) ஆன நிலையில் மனைவி 4 மாத கர்ப்பிணியானதால் அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் மகாராஜ்காஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இருகுடும்பத்தினரும் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்நிலையில் இளம்பெண் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைக்கேட்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்த நிலையில் தான் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது அந்த பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. திருமணம் முடிந்து வெறும் ஒன்றரை மாதமே ஆன நிலையில் எப்படி 4 மாத கர்ப்பிணியானாய் என அந்த இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து இளம்பெண்ணை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு இளைஞர் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு சென்றனர். மேலும் அவர்கள் சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், ‛‛எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை மாதங்கள் மட்டுமே ஆகிறது. ஆனால் எனது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி அறிந்திருந்தாலும் கூட எனது மனைவியின் பெற்றோர் அவரை எனக்கு திருமணம் செய்து ஏமாற்றிவிட்டனர். இதுதொடர்பாக எனது மனைவி, அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.