• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"பிறப்புறுப்பை" கம்பியால் தாக்கி.. நிர்பயாவுக்கு நடந்த அதே கொடுமை.. பூசாரியின் கொடூரம்!

|

லக்னோ: கோயிலுக்குள்ளேயே அக்கிரமம் நடந்துள்ளது.. சாமி கும்பிட வந்த பெண்ணை கோயில் பூசாரியே 2 பேருடன் சேர்ந்து நாசம் செய்துள்ளனர்.. அத்துடன் நிர்பயா போலவே, இந்த பெண்ணையும் இரும்பு கம்பி கொண்டு மிக கொடூரமாக தாக்கி கொன்றுள்ளனர்.. இவ்வளவும் நடந்தது ராம ராஜ்ஜியம் மலருவதாக சொன்ன அதே உத்தரபிரதேசத்தில்தான்.. இந்த பதற வைக்கும் சம்பவம் மக்களை மீண்டும் உலுக்க ஆரம்பித்துள்ளது.. !

நாளுக்கு நாள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அட்டகாசங்கள் பெருகி விட்டன.. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.. பெண்களுக்கான வன்முறைகளும் அதிகரித்தபடியே வருகின்றன.. இப்படி அடிக்கடி நடப்பதால், யோகி அரசை விமர்சித்தும், கேள்வி எழுப்பியும் எதிர்கட்சிகள் திணறடிக்கின்றன.

ஹத்ராஸில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையிலும், அந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி நிலையிலும்கூட பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

உபி

உபி

இந்தநிலையில், அதே உபியில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. மற்ற பாலியல் பலாத்கார சம்பவங்களாவது வயல்வெளியில், கரும்பு தோட்டத்தில், மயானங்களில் நடந்தது.. ஆனால் இந்த சம்பவம் ராம ராஜ்ஜியத்தை கொண்டு வருவோம் என்று சொன்ன அந்த மண்ணில் உள்ள ஒரு கோயிலுக்குள் நடந்துள்ளது.

 50 வயது பெண்

50 வயது பெண்

உத்திரபிரதேச மாநிலம் படான் மாவட்டத்தின் உகைட்டி என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வருகிறார் அந்த 50 வயசு பெண்.. அங்குள்ள அங்கன்வாடியில் வேலை பார்த்து வருகிறார்.. கல்யாணம் ஆகி ஒரு மகன் இருக்கிறாராம்.. அங்குள்ள கோவிலுக்கு இந்த பெண் அடிக்கடி சென்று வருவாராம்.. அப்படி போகும்போதெல்லாம் கோவிலில் உள்ள பூசாரி ஒரு மாதிரியாகவே பார்ப்பாராம்.

பிளான்

பிளான்

அவருடன் வேறு சிலரும் இந்த பெண்ணை கொஞ்ச நாளாகவே நோட்டமிட்டும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஒருநாள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவும் பிளான் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் அந்த பெண் கோயிலுக்கு சென்றுள்ளார்.. அது நைட் நேரம்.. கோயிலுக்குள் பூசாரியை தவிர வேறு யாரையுமே காணோம்.. அந்த சமயத்தை பயன்படுத்தி கொள்ள பூசாரி திட்டமிட்டார்..

 நண்பர்கள்

நண்பர்கள்

உடனே நண்பர்கள் 2 பேருக்கு போன் செய்து அவர்களை காரை எடுத்து கொண்டு கோயிலுக்கு வர சொன்னார்.. அவர்களும் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் காரை எடுத்து கொண்டு வந்து, அந்த பெண்ணை அதே காருக்குள் கடத்தி கொண்டு சென்றனர். பூசாரி உட்பட 3 பேருமே பெண்ணை துடிக்க துடிக்க பலாத்காரம் செய்துள்ளனர்... அத்துடன் மட்டுமில்லாமல் ஒரு இரும்பு கம்பியை எடுத்து அந்த பெண்ணையும் மிக கொடூரமாக தாக்கி உள்ளனர்.. இதில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் பிணமானார்..

சடலம்

சடலம்

உடனே சடலத்தை எடுத்து காரில் போட்டுக் கொண்டு, அந்த பெண்ணின் வீட்டிலேயே வீசி விட்டு தப்பி சென்றுவிட்டனர். வீட்டிற்குள் அம்மா ரத்த வெள்ளத்தில் சடலமாக வந்து விழுந்ததை கண்டு, அவரது மகன் கதறி துடித்தார்.. உடனடியாக போலீசுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லவும், போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம் செய்யும்போதுதான் டாக்டர்கள் மிரண்டு போய்விட்டனர்.. நிர்பயா போலவே இந்த பெண்ணையும் மிக கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுள்ளது தெரியவந்தது. இது சம்பந்தமான விசாரணையும் நடக்கிறது.. அந்த 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. பூசாரியை காணோமாம்.. போலீசார் தேடி வருகிறார்கள்.. இப்படி ஒரு கொடுமையான பலாத்கார கொலை சம்பவத்தை, எதிர்க்கட்சிகள் மீண்டும் மாநில அரசுக்கு எதிராக எழுப்பி வருகின்றன. !

English summary
Woman gang raped and murdered by three in Uttar pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X