லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாயத்து வாங்கலியோ தாயத்து.. காத்து கருப்பு மட்டுமில்ல கொரோனாவே அண்டாது.. புழுகிய சாமியார் கைது

Google Oneindia Tamil News

லக்னோ: கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க மாஸ்க் வாங்க முடியாதவர்களுக்காக தாயத்து தயார் செய்து விற்பனை செய்து வந்த பாபாவை போலீஸார் கைது செய்தனர்.

Recommended Video

    கொரோனா வராம இருக்க இதை பன்னுங்க... நித்யானந்தா சொன்ன டிப்ஸ்

    சீனாவில் புல்லட் ரயில் வேகத்தில் பரவிய கொரோனா வைரஸ் அங்கு தாக்கத்தை தற்போது குறைத்துக் கொண்டு மற்ற நாடுகளில் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் மட்டும் இந்த நோயால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

    அச்சம்

    அச்சம்

    எனவே கொரோனா வைரஸ் வந்தால் அதற்கென எந்த ஒரு சிகிச்சையும் இல்லை. காய்ச்சல், சளி, இருமல், சுவாசக் கோளாறு, வயிற்று போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சிகிச்சைகளே அளிக்கப்பட்டு வருகின்றன. இதை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன. இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த வைரஸ் குறித்து அச்ச நிலையே உள்ளது.

    வதந்தி

    வதந்தி

    இந்த நிலையில் கொரோனாவை குணப்படுத்த கோமியத்தை குடிக்கலாம் என சிலர் வதந்தி பரப்புகின்றனர். இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மாட்டு கோமியம் வழங்கப்பட்டது. அது போல் சாராயம் அருந்தினாலும் கொரோனா வராது என்ற வதந்தியை நம்பி சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    தாயத்து விற்பனை

    இத்தனை களேபரங்கள் அடங்குவதற்குள் மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. அதுவும் ஒரு சாமியாரால்!. லக்னோவை சேர்ந்தவர் அகமது சித்திக். இவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க தாயத்து விற்றதாக கூறப்படுகிறது. இந்த தாயத்து விற்பனைக்கு யாரெல்லாம் கொரோனாவுக்காக முகமூடி வாங்க முடியாமல் உள்ளனரோ அவர்கள் இந்த தாயத்தை வாங்கி செல்லலாம்.

    கைது செய்த போலீஸ்

    கைது செய்த போலீஸ்

    இது வெறும் ரூ 11 தான். இதை வாங்கி அணிந்தால் எந்த வைரஸும் கிட்ட வராது என வாசகங்களுடன் கடை போட்டு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த லக்னோ போலீஸார் பாபா சித்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை எச்சரித்து விடுவித்தனர். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A babaji from Lucknow arrested for selling Amulets which protects Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X