ஷாக்! கைகளை கட்டி..மிருகங்களான 3 பேர்.! கதறிய தலித் சிறுமி பலி! உச்சகட்ட பரபரப்பில் உத்திர பிரதேசம்!
லக்னோ : உத்திர பிரதேச மாநிலம் லக்னோ அருகே கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 13 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பாலியல் பலாத்காரம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள வட மாநிலங்களான அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு இதுபோன்ற கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மங்களகரமா 'விக்ரம்’ படத்துல! ஆல்வேய்ஸ் நன்றிகள் ஆண்டவரே! வீடியோ வெளியிட்ட 'வில்லேஜ் குக்கிங் சேனல்’!

பாலியல் வன்கொடுமை
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின் படி," இந்தியாவில் 2020ஆம் ஆண்டை காட்டிலும், 2021ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 13,618 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 19,953 குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

உபியில் அதிகம்
மாநில வாரியாகப் பார்த்தால் அதிக குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும் உள்ளது. 2021ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் 8 மாதங்களில் மட்டும் 10,084 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லியில் 2,147 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, ஹரியானாவில் 995 குற்றங்களும், மகாராஷ்டிராவில் 974 குற்றங்களும், கர்நாடகாவில் 467 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

பாலியல் பலாத்காரம்
உத்திர பிரதேச மாநிலம் லக்னோ அருகே கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 13 வயது தலித் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தத நிலையில், பாலியல் பலாத்காரம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஹாடி காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் கடண்ட் புதன்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் தனது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அதுல் சர்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பெரும் அதிர்ச்சி
ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை, மேலும் சிகிச்சைக்காக சிறுமியை கௌசாம்பி மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வியாழன் இரவு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்போதும் இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் யாரிடமும் கூறவில்லை என்றும், வெள்ளிக்கிழமை அவரது உடலை கொண்டு வந்ததாகவும் எஸ்பி கூறினார்

போலீசார் விசாரணை
இது தொடர்பாக நதீம், ஆதர்ஷ் பாண்டே மற்றும் விபுல் மிஸ்ரா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சிறுமி வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் சிறுமியை மீட்ட குடும்பத்தினர் பின்னர் மருத்துவமனை கொண்டு சென்றதாகவும், இந்த விஷயத்தை ஏன் மறைத்தார்கள் என்பது குறித்து குடும்பத்தினரிடமும் விசாரிக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர். மேலும்,
பிரேத பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும், வேறு யாரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடக்கிறது.