லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மரியாதையாக பேசுங்க.. போராடிய பெண்கள்.. தலித்துகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தலித்துகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுப்பு-வீடியோ

    லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்ட சம்பவம் குறித்து வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தவீடியோவில் கருப்பு சட்டை அணிந்த ஒருவர் தலித் பெண்களை கோயிலுக்கு செல்லவிடாமல் தடுக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த சில பெண்கள் குழுவாக கோயிலுக்குள் செல்ல முயற்சிக்கின்றனர்.

    அவர்களை கோயிலின் நுழைவு வாயிலில் நின்று இருந்த கருப்பு சட்டை அணிந்த நபர் உங்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கேவலமாக பேசி மறுக்கிறார்.

    இங்கேயே இருப்போம்

    இங்கேயே இருப்போம்

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண் ஒருவர், கையை நீட்டியபடி அவரிடம் மரியாதையாக பேசுங்க. "நீங்கள் எங்களை அடிக்க விரும்பினால், எங்களை அடியுங்கள். ஆனால் நாங்கள் இங்கே உட்கார்ந்து கொள்வோம் ... நாங்கள் இங்கேயே இருப்போம்.. என்று பிடிவாதமாக அமர்ந்தனர்.

    லத்திகளை கொண்டு வாங்க

    எங்களை ஏன் இங்கே கொல்லக்கூடாது? நாங்கள் இங்கே இறப்போம். லத்திகளைக் கொண்டு வாருங்கள் ... நாங்கள் தொடர்ந்து இங்கே அமர்ந்திருப்போம். நாங்கள் வெளியேற மாட்டோம். முழு கிராமத்தையும் இங்கே கொண்டு வருவோம். அவர்கள் பார்க்கட்டும் என்று மற்றொரு பெண் கூறினார்.

    உயர் ஜாதி கோயில்

    உயர் ஜாதி கோயில்

    அப்போது கருப்பு சட்டை அணிந்திருக்கும் நபர் தொலைப்பேசியில் யாரோ ஒருவருக்கு அழைத்தபடி இருக்கிறார். அப்போது அந்த நபர் "நான் ஏன் உன்னை அடிக்க வேண்டும்? இந்த சொத்து உயர் ஜாதியினருக்கு சொந்தமானது (ஜாதி பெயர் வேண்டாம்) என்று கூறுகிறார். மேலும் " இரண்டு உயர் ஜாதியினர் இங்கு நீண்ட காலமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்று கூறுகிறார்.

     கோயில் முன் தர்ணா

    கோயில் முன் தர்ணா

    அப்போது ஒரு பெண், இது ஒரு கோயில், கோயில் என்று கூறி அங்கே கூச்சலிடுகிறார். பின்னர் கேமரா வேறு பகுதியில் காட்டப்படுகிறது.அதில் வெள்ளை சட்டை அணிந்த நபர் கோயிலின் பிரதான கதவை பூட்டிவிட்டு வாயிலுக்கு நடந்து செல்வதை காண முடிந்தது. பின்னர் ஆண்கள் இருவரும் கேட் முன்பு நின்றபடி தங்கள் மொபைல் போன்களையே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். குறைந்தது 15க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் அங்கு இருப்பது தெரிகிறது.

    பதிவு

    பதிவு

    இதனிடையே கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட பெண்கள் சார்பில் விஜேந்தர் சிங் வால்மீகி என்பவர் போலீசில் புகார் அளித்தார். முன்னதாக இங்கு தாங்கள் வழிபாடு நடத்தியதாகவும் ஆனால் கடந்த வாரம் சில ஆண்கள் தலித் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டனர். இப்போது பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புகாரை ஏற்று கடந்த அக்டோபர் 25ம் தேதி போலீசார் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த 21ம் நூற்றாண்டில் இன்னமும் தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது வேதனையான சம்பவம் என பலரும் வீடியோவை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்

    English summary
    A video allegedly showing a group of women from the Dalits being denied entry to a temple in the western Uttar Pradesh's Bulandshahr district
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X